நாளை லண்டனில் உள்ள பிரித்தானிய தமிழர் விளையாட்டு விழாவினை முன்னிட்டு அதன் ஏற்பாட்டாளர்களான பிரித்தனிய தமிழர் விளையாட்டுக் கழகமும் பிரித்தானிய தமிழ் வர்த்தக சம்மேளனமும் இணைந்து வெளிப்படுத்திய ஊடக அறிக்கையின் முழு வடிவமும் கீழே தரப்பட்டுள்ளது.
பிரித்தானிய தமிழர் விளையாட்டுக் கழகத்தினால் வருடம் தோறும் நடாத்தப்படும் விளையாட்டுப் போட்டி இறுதி நிகழ்வுகளும் பரிசளிப்பு விழாவும் இம்முறை 19.07.2015 ஞாயிற்றுக் கிழமை உலகத் தரம் வாய்ந்த விளையாட்டு மைதானமான Lee Valley Athletics Centre, Lee Valley Leisure Complex, 61 Meridian Way, Edmonton, London N9 0AR இல் வெகு விமர்சையாக நடைபெறுவதற்கு ஏற்பாடாகியுள்ளது. பிரித்தானியா வாழ் தமிழ் சமூகத்தினிடையே தடகள விளையாட்டுப்போட்டியை ஊக்குவிக்கவும், இளையோருக்கு விளையாத்துறையின் அடுத்த நிலைக்கு தம்மை இட்டுச் செல்ல ஆர்வத்தை கொடுக்கும் முகமாக இவ்விளையாட்டுப் போட்டி ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
இம்முறை இந்த விளையாட்டு விழாவிற்கு பலம் சேர்க்கும் முகமாக பிரித்தனிய தமிழர் விளையாட்டுக் கழகமானது , பிரித்தானிய தமிழ் வர்த்தக சம்மேளனத்துடன் கரம் கோர்த்து இவ்விழாவை முன்னெடுக்கின்றது. பிரித்தானிய தமிழ் வர்த்தக சம்மேளனத்தின் ஏற்பாட்டில் வர்த்தக கண்காட்சியும் மலிவு விற்பனைகளும் நடாத்தப்படும்.
அத்தோடு பின்வரும் தொண்டு நிறுவனங்களும் இவ்விளையாட்டு விழாவை மேலும் வலுபடுத்தும் வகையில் இவ்விழாவில் இணைந்து செயலாற்றுகின்றனர்:
1. மனிதாபிமானப்பணிகளுக்கான ஐக்கிய அறக்கட்டளை (UTHA):
இவ்விழாவில் சிறுவர்கள் அடங்கலாக அனைவரையும் கவரும் களியாட்ட போட்டி நிகழ்வுகளை ஏற்பாடு செய்துள்ளார்கள். இதில் தாயக பாரம்பரிய விளையாட்டுக்களும் அடங்கும்.
2. இரங்கும் இல்லம் (Sympathetic Home) – இரங்கும் இல்லத்தை சார்ந்த திரு. சிவனடியார் மாயாஜால நிகழ்வை நடாத்துகின்றார்.
3. சிறுவர்க்கே முதலிடம் (Child First) : இந்த நிகழ்விற்காக தொண்டர்களை தந்து உதவுகின்றனர்
4. யாழ்ப்பாணம் மரித்துவபீடத்தின் கடல் கலந்து வாழும் பழைய மாணவர் சங்கத்தினர் இந் நிகழ்விற்கான முதலுதவிச் சேவையினை வழங்குகின்றனர்
வழமைபோல இம்முறையும் பல்லாயிரக்கணக்கானோர் இப்போட்டிகளை ஊக்குவிக்குமுகமாக கலந்து கொள்வார்கள் என எதிர்பார்க்கப்படுகின்றது.
விழா ஏற்பாட்டுக்குழுவினரால் பின்வரும் அறிவித்தல் விடப்படுகின்றது :
– நிகழ்வுகள் அனைத்தும் 09.00 மணிக்கு உத்தியோக பூர்வமாக ஆரம்பமாகும்
– நுழைவுக்கட்டணம் : 12 வயதுக்கு மேற்பட்டவர்களுக்கு £4.00 அறவிடப்படும்; 5-12 வயதுக்கு உட்பட்டவர்களுக்கு £2.00; 5 வயதுக்கு உட்பட்டவர்களுக்கு அனுமதி இலவசம்
– காலை 09.00 முன் அனைவருக்கும் அனுமதி இலவசம்
– வாகன தரிப்பிட வசதிகள் இலவசம்
– பணத்தினை மாற்றிப் பெற்றுக் கொள்ளும் கருவிகள் (ATM) இல்லாத காரணத்தினால் உங்களுக்கு தேவையான பணத்தினை வரும் போதேகொண்டுவரும் படி வேண்டப்படுகின்றீர்கள்.
– பண அட்டைப்பரிமாற்ற வசதிகள் (Card Payments) மைதானத்தில் இல்லை.
இவ்விழாவினை இணைந்து ஏற்பாடு செய்யும் நிறுவனங்கள் இலாப நோக்கற்ற நிறுவனங்களாகும். புலம் பெயர்ந்தும் தாயகத்திலும் வாழும் எமது உறவுகளை வலுப்படுத்தும் நோக்கிற்காக இயங்குபவை என்பதனை கருத்தில் கொண்டும் , எமது இளம் வீரர்களையும் வீராங்கனை உற்சாகப்படுத்துவற்கும், அனைத்து வயதினரையும் கவரும் விதத்தில் ஏற்பாடு செய்யப்பட்டுள்ள நிகழ்வுகளில் கலந்து கொண்டு களிப்புறவும் அனைவரையும் தமது குடும்பத்தினரோடு கலந்து கொள்ளுமாறு அன்பாக கேட்டுக் கொள்கின்றோம்
மேலதிக தகவல்களுக்கு
07809 561 922 / 07931 753 610 / 07956 503 017 / 07722 807 581