நடந்து முடிந்த பொதுத்தேர்தலில் தமிழ் தேசிய கூட்டமைப்பு வடக்கு கிழக்கில் 14 ஆசனங்களை பெற்று அமோக வெற்றி பெற்றுள்ளது. தமிழ் தேசிய கூட்டமைப்புக்குள் சிறீதரன் அதிகூடிய விருப்பு வாக்குகளைப் பெற்று அதிக வரவேற்பைப் பெற்றுள்ளார்.
மாவட்ட ரீதியான ஆசனங்கள் :
யாழ் மாவட்டம் – 5 உறுப்பினர்கள்
வன்னி மாவட்டம் – 4 உறுப்பினர்கள்
திருகோணமலை மாவட்டம் – 1 உறுப்பினர்
மட்டக்களப்பு மாவட்டம் – 3 உறுப்பினர்கள்
அம்பாறை மாவட்டம் – 1 உறுப்பினர்
யாழ் மாவட்டத்தில் பெற்றுக்கொண்ட விருப்பு வாக்குகள்
1. சி.சிறீதரன் – 72058
2. மாவை.சேனாதிராசா – 58782
3. எம்.ஏ.சுமந்திரன் – 58043
4. த. சித்தார்த்தன் – 53740
5 ஈ.சரவணபவன் – 43289