இலங்கை தமிழ் மாணவி ஒருவர் சர்வதேச விண்வெளி ஓட்டத்திற்கு செல்லும் அறிய வாய்ப்பை பெற்றுள்ளார். பிரித்தானியாவில் கல்வி கற்கும் மாணவர்கள் பலர் விண்வெளி தொடர்பான கற்றல் நடவடிக்கையில் தம்மை ஈடுபடுத்தி வருகிறார்கள்.
இந்த மாணவர்களில் மிகவும் உச்ச திறமையை வெளிப்படுத்தும் 2 மாணவர்களை விண்வெளிக்கு அனுப்ப பிரித்தானியா விண்வெளி ஆராய்ச்சி மையம் முடிவெடுத்தது.
அதில் மிகத் திறமையாக செயல்பட்டு இலங்கை தமிழ் மாணவியான சியோபன் ஞானகுலேந்திரன் என்ற மாணவி தெரிவாயுள்ளார். குறித்த மாணவி நுண்ணியல் உயிர்கள் தொடர்பில் கற்று வருகிறார்கள். அத்தோடு விண்வெளி ஆராய்ச்சியிலும் ஈடுபட்டும் வருகிறார்.
தற்போது கிடைத்துள்ள இந்த அரிய வாய்ப்பை பயன்படுத்தி சர்வதேச விண்வெளி ஓட்டத்திற்கு செல்லும் இரண்டு மாணவிகளும் நுண்ணுயிர் ஆய்வில் ஈடுபட உள்ளார்கள் என்பது குறிப்பிடத்தக்கது. மற்றைய மாணவி பிரித்தானியாவைச் சேர்ந்த டியானா என்பதும் குறிப்பிடத்தக்கது.