சேரன், சோழன், பாண்டியன் காலத்தில் தற்காப்பு கலையாகும். ஒரு பாரம்பரிய கலையாக இருந்து வந்த சிலம்பாட்டம் காலப்போக்கில் மறைய தொடங்கியது.
பிரசித்தி பெற்ற தமிழர்களின் கலையை பள்ளிகளில் படிக்கும் மாணவ மாணவிகள் மூலம் வெளிக்கொணர்வதற்காக, தமிழ்நாடு சிலம்பாட்ட கழகம் முயற்சி எடுத்து வருகிறது.
தற்போது இந்த கலை தமிழ் நாட்டில் மட்டும் அல்லாமல் இலங்கை, சிங்கப்பூர், மலேசியா ஆகிய நாடுகளிலும் பயிற்றுவிக்கப்பட்டு வருகிறது.
மேலும் நீலகிரி மாவட்ட பள்ளிகளில் சிலம்பாட்டம் கற்க மாணவ மாணவிகள் ஆர்வம் காட்டி வருவது தமிழ்நாடு சிலம்பாட்ட கழகத்தை பெருமிதம் அடைய செய்திருக்கிறது.
வணக்கம் இலண்டனுக்காக நீலகிரியிலிருந்து அனஞ்சன்