புதிய ஏவுகணை செயன்முறையை மேம்படுத்துவதற்குத் திட்டமிட்டுள்ளதாக, ரஷ்யா அறிவித்துள்ளது. ஆயுதக் கட்டுப்பாடு தொடர்பிலான உடன்படிக்கையை, ரஷ்யா மற்றும் அமெரிக்கா ஆகிய இருநாடுகளும் இடைநீக்கம் செய்துள்ள நிலையில், ரஷ்யா இத்தகைய அறிவிப்பை வெளியிட்டுள்ளது.
1987 ஆம் ஆண்டு இடம்பெற்ற பனிப்போரின் பின்னர், ஐரோப்பாவில் நிலவிய பதற்றநிலையைத் தணிக்கும் நோக்குடன் அமெரிக்கா மற்றும் ரஷ்யாவுக்கு இடையில் இடைநிலை வீச்சு அணுவாயுத ஒப்பந்தம் கைச்சாத்திடப்பட்டது.
குறித்த இடைநிலை வீச்சு அணுவாயுத ஒப்பந்தத்தின் ஊடாக, இருநாடுகளினதும் நடுத்தர மற்றும் குறுகிய தூர ஏவுகணை பயன்பாடு தடை செய்யப்பட்டிருந்தது.
இந்நிலையில், இந்த ஒப்பந்தத்தை மீறி ரஷ்யா செயற்படுவதாகவும் இதனால் தாம் உடன்படிக்கையிலிருந்து வெளியேறத் தயார் எனவும் அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் கடந்த வாரம் அறிவித்திருந்தார். இதனிடையே, புதிய ஏவுகணை செயன்முறையை மேம்படுத்துவதற்குத் திட்டமிட்டுள்ளதாக ரஷ்யா அறிவித்துள்ளது.
இந்நிலையில், புதிய ஏவுகணை செயன்முறையை எதிர்வரும் இரு வருடங்களுக்குள் உருவாக்குவதே இலக்கு என, ரஷ்ய பாதுகாப்பு அமைச்சர் செர்கெய் ஷொய்கு தெரிவித்துள்ளார்.
இந்நிலையில், இரு நாடுகளினதும் அணுவாயுத நகர்வுகள், புதிய ஆயுதப் போட்டியை உருவாக்கும் என, நிபுணர்கள் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.