கடந்த 5 ஆண்டு காலத்தில் அதியுயர் வெப்பநிலை பதிவாகியுள்ளதாக அமெரிக்க விண்வெளி ஆராய்ச்சி நிலையமான நாசா தெரிவித்துள்ளது.
கடந்த 2018 ஆம் ஆண்டிலேயே 4 ஆவது அதியுயர் வெப்பநிலை பதிவாகியதாக நாசா தெரிவித்துள்ளது. கடந்த 2018 ஆம் ஆண்டிலிருந்து பெறப்பட்ட தரவுகளின்படி, குறித்த விபரம் தெரியவந்துள்ளது.
2015 மற்றும் 2016 ஆம் ஆண்டுகளில் எல் நினோ காரணமாக வெப்பநிலை அதிகரித்ததாகவும் இதனால் காலநிலையில் மாற்றங்கள் ஏற்பட்டதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
2018 இல் மிகக் கடுமையான பாதிப்புக்களை ஏற்படுத்தியிருந்த கலிஃபோர்னியா மற்றும் கிரேக்கத்தில் ஏற்பட்ட காட்டுத்தீ தென்னாபிரிக்காவில் ஏற்பட்ட வரட்சி, கேரள வெள்ளம் போன்ற அனர்த்தங்களுக்கு பச்சைவீட்டு விளைவே முக்கிய காரணம் எனவும் நாசா சுட்டிக்காட்டியுள்ளது.