இலங்கையிலிருந்து 70 பேர் கொண்ட படகு ஒன்று ரீயூனியன் தீவு அந்நாட்டு அதிகாரிகளால் கடந்த பெப்ரவரி 4ம் தேதி மாலை மறிக்கப்பட்டுள்ளது.
இந்திய பெருங்கடலில் அமைந்திருக்கும் ரீயூனியன் தீவு, பிரான்ஸ் நிர்வகிக்கும் தீவாக இருந்து வருகின்றது. இத்தீவின் கரையை சென்றடைய 5 கிலோ மீட்டர்கள் இருந்த நிலையில் இலங்கைப் படகு இடைமறிக்கப்பட்டுள்ளது.
இந்த 70 பேரில் பெண்களும், குழந்தைகளும் உள்ளதாகவும் கூறப்படுகின்றது. கடந்த ஆண்டு, இதே போன்றதொரு முயற்சி இலங்கை கடல்படையினரால் தடுத்து நிறுத்தப்பட்டு 90 இலங்கையர்கள் கைது செய்யப்பட்டிருந்தனர்.
சமீப ஆண்டுகளாக ஆஸ்திரேலியா, நியூசிலாந்து போன்ற நாடுகளுக்கு செல்லும் இலங்கையர்களின் முயற்சிகள், கடுமையான கட்டுப்பாடுகளின் காரணமாக தோல்வி அடைந்து வருகின்றது.
தற்போது கைது செய்யப்பட்டவர்கள் இந்த நிலைமையை மனதில் கொண்டு, பிரான்சின் தீவுப்பகுதிக்கு செல்லும் முயற்சியை நம்பியிருக்கலாம் என கருதப்படுகிறது.