கனடாவின் ஹலிபக்ஸ் நகரிலுள்ள வீடு ஒன்றில் பரவிய தீயில் சிக்கி 7 சிறுவர்கள் உயிரிழந்துள்ளதாக, பொலிசார் தெரிவித்துள்ளனர். குறித்த சிறுவர்கள் 7 பெரும் ஒரே குடும்பத்தைச் சேர்ந்தவர்கள் என நம்பப்படுவதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.
நேற்று ஏற்பட்ட இந்தத் தீ விபத்தில் சிக்கி மேலும் பெண் ஒருவரும் ஆண் ஒருவரும் காயமடைந்துள்ளனர். இந்தச் சம்பவத்தில் உயிரிழந்த குடும்பத்தினர் தொடர்பில் எந்த அடையாளமும் கிடைக்கவில்லை என் பொலிஸார் கூறுகின்ற நிலையில், சிரியாவைச் சேர்ந்த குடும்பமே இவ்வாறு குறித்த வீட்டில் தங்கியிருந்ததாக, BBC செய்தி நிறுவனம் தெரிவித்துள்ளது.
இந்நிலையில், கடந்த ஒன்றரை வருட காலமாக கனடாவில் வசித்துவந்த குறித்த குடும்பம், கிட்டத்தட்ட கடந்த 6 மாத காலமாக ஹலிபக்சில் குடியேறியுள்ளதாக, பிபிசியின் செய்தியாளர் குறிப்பிட்டுள்ளார். சம்பவத்தில் காயமடைந்த உயிரிழந்த சிறுவர்களின் தந்தையின் நிலை கவலைக்கிடமாக உள்ளதெனக் கூறப்படுகின்றது.
\மேலும், இந்த தீ விபத்து தொடர்பிலான விசாரணைகள் முன்னெடுக்கப்படுவதாக, ஹலிபக்ஸ் நகர அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். இந்தநிலையில், கனேடிய பிரதமர் ஜஸ்டின் ருடியூ குறித்த குடும்பத்தினருக்கு தனது அனுதாபங்களைத் தெரிவித்துள்ளார்.