சிறுவர்களின் பாதுகாப்பு தொடர்பில் நடவடிக்கை எடுக்க தேசிய நிதியமொன்றை அடுத்த இரண்டு வாரங்களுக்குள் ஸ்தாபிக்கவுள்ளதாக ஜனாதிபதி மைத்திரிபாலா சிறிசேன தெரிவித்தார்.
சிறுவர்கள் முகங்கொடுக்கும் பிரச்சினைகள் தொடர்பில் விசேட சமூக ஆய்வறிக்கையைப் பெற்று, அவர்களுக்காக அரசாங்கம் முன்னெடுக்கும் திட்டங்களை மேலும் வலுப்படுத்தி துரிதப்படுத்த எதிர்பார்ப்பதாக ஜனாதிபதி தெரிவித்தார்.
கொழும்பு சுகதாச உள்ளக விளையாட்டரங்கில் இடம்பெற்ற றுவர்களை பாதுகாப்போம் தேசிய வேலைத்திட்டத்தின் கொழும்பு மாவட்ட மாநாட்டில் உரையாற்றிய போது ஜனாதிபதி இதனைக் கூறினார்.
தற்போது எழுந்துள்ள பல்வேறு சமூக சவால்களுக்கு மத்தியில் சிறுவர்களின் பாதுகாப்பு தொடர்பில் விரிவான சமூக விவாதமொன்று அவசியம் எனவும் ஜனாதிபதி இதன்போது குறிப்பிட்டார்.