2
ஜனாதிபதி தேர்தலுக்கான முக்கிய வேட்பாளர் ஒருவரின் பிரசார கூட்டம் ஒன்று இன்றையதினம் முல்லைதீவு கரைதுரைப்பற்று பிரதேசசபை மைதானத்தில் இடம்பெற்றது . இக் கூட்டத்தில் கலந்துகொள்வதற்காக பஸ்களில் அழைத்துவரப்பட்டவர்களுக்கு மதுபான போத்தல்கள் வழங்கப்பட்டதை அவதானிக்க முடிந்தது
பிரசார கூட்டம் முடிந்த கையோடு முல்லைத்தீவு நகர கடற்கரையில் வைத்து ஒவ்வொரு பஸ்களுக்கும் தலா 5 மதுபான போத்தல்கள் வழங்கப்பட்டதை அவதானிக்க முடிந்தது .
மதுபான போத்தல்கள் வழங்களில் ஏற்பட்ட முரண்பாடுகள் காரணமாக முல்லைத்தீவு நகர கடற்கரைக்கு அண்மையாக சில குழுக்கள் வாக்குவாதங்களில் ஈடுபட்டனர்.
அத்தோடு பொது இடங்களான கடற்கரை மற்றும் வீதிகளில் வைத்து மதுபானத்தை அருந்திய சம்பவங்களையும் அவதானிக்கமுடிந்தது .