நாட்டின் தற்போதைய ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச மேற்கொள்ளும் நடவடிக்கைகளை தான் அன்று முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவிடமும் கண்டதாக முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் ஹிருணிகா பிரேமச்சந்திர தெரிவித்துள்ளார்.
கொழும்பில் ஐக்கிய மக்கள் சக்தி கட்சியின் தலைமையகத்தில் நேற்று நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பில் அவர் இதனை கூறியுள்ளார்.
இதன்போது அவர் மேலும் தெரிவித்துள்ளதாவது,
அரச அதிகாரிகளை திட்டுவதால், மாற்றத்தை ஏற்படுத்த முடியும் என நினைக்கவில்லை.
தனது சகோதரரான பிரதமர் மீதுள்ள ஆத்திரத்தையே ஜனாதிபதி, மத்திய வங்கியின் அதிகாரிகளை கடுமையாக குற்றம் சுமத்தி, அந்த அதிகாரிகள் மீது தனது கோபத்தை காட்டியிருக்கலாம்.
முன்னாள் ஜனாதிபதி சிறிசேன தற்போதைய ஜனாதிபதி நந்தசேன எனவும் இரண்டு சேனாக்களும் ஒரே மாதிரியானவர்கள் என்றும் தெரிவித்துள்ளார்.
ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்சவின் முழுப்பெயர் நந்தசேன கோட்டாபய ராஜபக்ச என்பது குறிப்பிடத்தக்கது.