நேற்று (புதன்கிழமை) ஒரேநாளில் 31 இலட்சத்து 39 ஆயிரம் பேருக்கு தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளது.
இதனையடுத்து தடுப்பூசி பெற்றுக்கொண்டவர்களின் மொத்த எண்ணிக்கை 11 கோடியை தாண்டியுள்ளதாக சுகாதார அமைச்சகம் அறிவித்துள்ளது.
இதில் மகாராஷ்டிரா, ராஜஸ்தான், பஞ்சாப் ஆகிய மாநிலங்களில் மட்டும் ஒரு கோடிக்கு மேற்பட்டோருக்கு தடுப்பூசி போடப்பட்டுள்ளது.
மேலும் 45 வயதிற்கு மேற்பட்டோருக்கு தடுப்பூசி போடப்பட்டு வருகின்ற நிலையில், ஏற்கனவே தடுப்பூசி பெற்றுக்கொண்டவர்களுக்கான இரண்டாவது டோஸ் தடுப்பூசி போடப்பட்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.