செய்திகள்

புகைப்படத் தொகுப்பு

Home உலகம்ஆசியா பழங்குடியினரிடையே ஏற்பட்ட மோதலில் 15 பேர் உயிரிழப்பு

பழங்குடியினரிடையே ஏற்பட்ட மோதலில் 15 பேர் உயிரிழப்பு

0 minutes read

பாகிஸ்தானின் வடமேற்கு பிராந்தியத்தில் நிலக்கரிச் சுரங்கத்தின் எல்லை தொடர்பாக இரண்டு பழங்குடியினருக்கு இடையே கடந்த 2 ஆண்டுகளாக தகராறு நீடித்து வருகிறது.

இந்த நிலையில், குறித்த நிலக்கரி சுரங்கத்தை எல்லை நிர்ணயம் செய்வதில் ஏற்பட்ட மோதலில் குறைந்தது 15 பேர் கொல்லப்பட்டதாக பொலிஸார் தெரிவித்தனர்.

கோஹாட் மாவட்டத்தில் பெஷாவரில் இருந்து தென்மேற்கே 35 கிமீ தொலைவில் உள்ள தர்ரா ஆடம் கெக் பகுதியில் சன்னிகேல் மற்றும் ஜர்குன் கெல் பழங்குடியினருக்கு இடையே இந்த சம்பவம் நிகழ்ந்தது.

இதன்போது, துப்பாக்கிச்சூடு நடத்தியதில் இரு தரப்பிலும் 15 பேர் உயிரிழந்துள்ளனர்.

பாதுகாப்புப் படையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து, பழங்குடியினருக்கு இடையேயான துப்பாக்கிச் சூட்டை நிறுத்தியுள்ளனர்.

இதையடுத்து காயமடைந்தவர்கள் பெஷாவர் மருத்துவமனைக்கு கொண்டுசெல்லப்பட்டனர். காயமடைந்தவர்களின் சரியான எண்ணிக்கை உடனடியாகத் தெரியவில்லை.

சினிமா

விமர்சனம்

கட்டுரை

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More