0
சுகாதார அமைச்சர் கெஹலிய ரம்புக்வெலவுக்கு எதிரான நம்பிக்கையில்லாப் பிரேரணை எதிர்வரும் 6, 7 மற்றும் 8 ஆம் திகதிகளில் நாடாளுமன்றத்தில் விவாதத்துக்கு எடுத்துக்கொள்ளப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
நாடாளுமன்றத்தில் இன்று நடைபெற்ற கட்சித் தலைவர்கள் கூட்டத்தில் இது தொடர்பில் முடிவு எடுக்கப்பட்டுள்ளது.
அத்துடன், நம்பிக்கையில்லாப் பிரேரணை மீதான வாக்கெடுப்பு 8 ஆம் திகதி மாலை நடைபெறவுள்ளது.