ராமேசுவரத்தில் இருந்து மீன்பிடிக்க சென்ற ஒரு படகுடன் 8 மீனவர்களை இலங்கை கடற்படையினர் கடந்த சில நாட்களுக்கு முன்பு சிறைப் பிடித்தனர்.
இதனையடுத்து, பறிமுதல் செய்யப்பட்ட படகு மற்றும் மீனவர்களை விடுதலை செய்யக்கோரி மத்திய, மாநில அரசுகள் நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி இரண்டு நாட்கள் வேலை நிறுத்த போராட்டம் மேற்கொண்டனர்.
இதனால் நாள் ஒன்றுக்கு ரூ.5 கோடி வரை மீன் ஏற்றுமதி வர்த்தகம் பாதிக்கப்பட்டது. மேலும் 5 ஆயிரம் மீனவர்கள் உள்ளிட்ட 25 ஆயிரம் தொழிலாளர்கள் நேரடியாகவும், மறைமுகமாகவும் வேலையிழந்து பாதிப்புக்குள்ளாகினர்.
மீனவர்களின் தங்களுடைய வாழ்வாதாரத்தை கருத்தில் கொண்டு வேலை நிறுத்த போராட்டத்தை இன்று வாபஸ் பெற்றனர்.
இதனைதொடர்ந்து, ஆயிரத்திற்கும் மேற்பட்ட மீனவர்கள் மீன்வளம் மற்றும் மீனவர் நலத்துறை அனுமதி பெற்று இன்று காலை கடலுக்கு மீன்பிடிக்க சென்றனர்.
இலங்கை கடற்படையின் அச்சமின்றி மீன்பிடிக்க அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரிக்கை விடுத்தனர்.