இந்தியாவில் இருந்து ரஷியாவின் மாஸ்கோவுக்கு பயணிகள் விமானம் புறப்பட்டுச் சென்றது.
அந்த விமானம் ஆப்கானிஸ்தானின் வடகிழக்குப் பகுதியில் உள்ள பதக்ஸ்தான் மாகாணத்தில் பறந்து கொண்டிருந்தபோது திடீரென கட்டுப்பாட்டு அறையுடனான தொடர்பு துண்டிக்கப்பட்டது.
விமானத்தைத் தொடர்பு கொள்ள அதிகாரிகள் முயற்சி செய்தும் முடியவில்லை. இதற்கிடையே, இந்திய பயணிகள் விமானம் தோப்கானே மலைப் பகுதியில் விபத்துக்குள்ளானதாக ஆப்கானிஸ்தான் ஊடகங்கள் தெரிவித்துள்ளன.
விபத்து நடந்த பகுதிக்கு மீட்புக்குழுவினர் அனுப்பப்பட்டு உள்ளதாக ஆப்கானிஸ்தான் அரசு வட்டாரங்கள் தெரிவித்தன.
இந்நிலையில், ரஷியா நோக்கிச் சென்று விபத்தில் சிக்கிய விமானம் இந்தியாவைச் சேர்ந்ததல்ல என இந்திய மத்திய அரசு தெரிவித்துள்ளது.
விபத்தில் சிக்கிய விமானம் மொராக்கோ நாட்டைச் சேர்ந்த சிறிய விமானம் என மத்திய அரசு விளக்கம் அளித்துள்ளது.