கிருஷ்ணகிரியில் இருந்து பர்கூருக்கு செல்லும் வழியில் பல இடங்களில் 2 ஆயிரம் ரூபாய் நோட்டுக்கு பதிலாக 500 ரூபாய் நோட்டுகள் வழங்கப்படும் என குறிப்பிட்டு சுவரொட்டி ஓட்டப்பட்டுள்ளது.
இதை அந்த வழியாக சென்ற பொதுமக்கள் பார்த்து அதில் குறிப்பிட்டிருந்த எண்ணிற்கு தொடர்பு கொண்டு பேசினார்கள்.
அப்போது அந்த நபர், 2 ஆயிரம் ரூபாய் நோட்டுகள் தந்தால் தான், 3 ஐநூறு ரூபாய் நோட்டுகள் தருவேன் என்றும், மாற்றி கொடுப்பதற்கு 500 ரூபாய் கமிஷன் என்றும் கூறினார்.
இதுகுறித்து அறிந்த பொலிஸார் சம்பந்தப்பட்ட நபரிடம் அலைபேசில் தொடர்பு கொண்டு விசாரணை நடத்தினார்கள். அதில் அவர் கிருஷ்ணகிரி மாவட்டம் பெலவர்த்தி ஊராட்சி வள்ளுவர்புரத்தை சேர்ந்தவர் என்பது தெரியவந்தது.
கடந்த பொங்கல் பண்டிகையின் போது அவரது வீட்டை சுத்தம் செய்கையில் 2 ஆயிரம் ரூபாய் நோட்டுகள் 4 கிடைத்ததாகவும், அதை சென்னை சென்று ரிசர்வ் வங்கியில் மாற்றி வந்ததாகவும், ஆகவே ரூ.500 கமிஷன் பெற்று இதை போல மாற்றலாம் என்ற எண்ணத்தில் தான் சுவரொட்டி ஒட்டியதாகவும் கூறினார்.
இதுகுறித்து சம்பந்தப்பட்ட நபர் மீது வழக்குப்பதிவு செய்து பொலிஸார் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.