மேற்கு இலண்டனில் கென்சிங்டனில் உள்ள ஒரு மாடி வீட்டில் வெள்ளிக்கிழமை காலை தீப்பிடித்த நிலையில், சுமார் 100 தீயணைப்பு வீரர்கள் மற்றும் 15 தீயணைப்பு வாகனங்கள் சம்பவ இடத்துக்கு வரவழைக்கப்பட்டன.
கட்டிடத்தின் முதல், இரண்டாவது மற்றும் நான்காவது தளங்களில் இருந்து 5 பேர் மீட்கப்பட்டதுடன், 11 பேர் புகையை சுவாசித்த நிலையில், சிகிச்சைக்காக மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டனர்.
தீயணைப்பு படைகள் வரவழைக்கப்பட்ட இரண்டு மணி நேரத்திற்குப் பிறகும் ஐந்து மாடி கட்டிடத்தின் தரைத்தளத்தின் பாதி, வெள்ளிக்கிழமை அதிகாலை வரை தொடர்ந்து எரிந்து கொண்டிருந்தது.
உதவி கிடைப்பதற்கு முன்னரே தெற்கு கென்சிங்டனில் உள்ள Emperor’s Gate இருந்து 15 பேர் வெளியில் சென்றதுடன், மொத்தம் 130 குடியிருப்பாளர்கள் வெளியேற்றப்பட்டனர்.
இதனையடுத்து, தீயணைப்புப் படையினர் பெரும் போராட்டத்துக்கு மத்தியில் அதிகாலை 4.40 மணியளவில் தீயை கட்டுக்குள் கொண்டு வந்தனர்.