சினம்கொள் திரைப்படத்தை இயக்கிய ரஞ்சித் ஜோசப் இயக்கியுள்ள புதிய திரைப்படம் ஊழி. 2009ஆம் ஆண்டுக்குப் பிந்தை ஈழத்தில் இருண்ட காலத்தை பேசும் திரைப்படமாக ஊழி அமைந்திருக்கும் எனக் கூறப்படுகிறது.
இந்தத் திரைப்படத்தின் பாடல் வெளியீடு எதிர்வரும் 8ஆம் திகதி புதன் கிழமை கிளிநொச்சியில் இடம்பெறவுள்ளது. ஏ9 வீதியில் அமைந்துள்ள கிளிநொச்சி மாவட்ட செயலக திறன்விருத்தி மண்டபத்தில் இந்த நிகழ்வு இடம்பெறவுள்ளது.
ஈழப் பாடகி பார்வதி சிவபாதம் மற்றும் ஈழ இசையமைப்பாளர் செயல்வீரன் ஆகியோர் பாடல்களை வெளியீட்டு வைக்கவுள்ளனர். இயக்கனர் ரஞ்சித், இசையமைப்பாளர் ரகுநந்தன், பாடலாசிரியர் தீபச்செல்வன் உள்ளிட்டோருடன் படத்தில் பணியாற்றிய கலைஞர்களும் கலந்துகொள்ளவுள்ளனர்.
தென்னிந்திய கலைஞர்களுடன், சிங்கள கலைஞர்களும் இணைந்து பணியாற்றியுள்ள இந்த திரைப்படத்திற்கான படப்பிடிப்புக்கள் இலங்கையின் வடக்கு கிழக்கில் இடம்பெற்றுள்ளன.