டிராமி புயல் காரணமாக பிலிப்பைன்சில் இசபெலா, இபுகாவோ, படாகஸ் உள்பட பல்வேறு மாகாணங்களில் கனமழை பெய்து வருகின்றது.
மணிக்கு 160 கிலோமீட்டர் வேகத்தில் பலத்த காற்று வீசிய நிலையில், மழையால் நகரின் பல பகுதிகளில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது.
அத்துடன், பல பகுதிகளில் நிலச்சரிவும் ஏற்பட்டதுடன், கனமழை, வெள்ளம், நிலச்சரிவில் சிக்கி இதுவரை 81 பேர் உயிரிழந்துள்ளனர். மேலும், 41 பேரை காணவில்லை.
அவர்களை தேடும் பணிகள் தீவிரமாக நடைபெற்று வருவதுடன், பலி எண்ணிக்கை மேலும் அதிகரிக்கக்கூடும் என அஞ்சப்படுகின்றது.