யூலை மாதத்தில் முதலாவது கிழமையில் கொரோனா தொற்று மூன்று எண்கள் என்ற நிலைக்கு வந்ததைத்தொடர்ந்து, “முகக்கவசம் அணிவதன் மூலம் நாம் எம்மையும், பிறரையும் பாதுகாத்துக்கொள்ளலாம்” எனக் கூட்டாட்சியின் தலைவர் சிமொனெத்தா சமறூகா கூறியுள்ளார்.
முகக்கவசம் அணிவது ஒரு வகை தடுப்பு நடவடிக்கையாகும். மற்றும் தொடர்ந்தும் அதிகரித்து வரும் பயணப்போக்குவரத்தின் விளைவாகவும் இது கருதப்படுகின்றது.
பேருந்து அல்லது தொடரூந்தில் ஐம்பது விழுக்காடு மட்டும் பயணிகள் இருந்தால் முகக்கவசத்தை அணிய வேண்டுமா?
ஆம், எத்தனை ஆசனங்கள் வெறுமையாக இருந்தாலும் முகக்கவசம் அணிவது கட்டாயமாகும். ஏனெனில் எத்தனை பயணிகள் அடுத்தடுத்த தரிப்பிடங்களில் ஏறப்போகின்றார்கள் என்பது முன்கூட்டியே எமக்குத்தெரியாது.
எந்த முகக்கவசங்களை அணிய வேண்டும்? எவ்வாறு முகக்கவசங்களை சரியாக அணிய முடியும்?
முகக்கவசத்தை தொடுவதற்கு முன் கைகளை ஒழுங்காக கழுவ வேண்டும். அதாவது 20 தொடக்கம் 30 நொடிகள் வரை கைகளை கழுவ வேண்டும் அல்லது தொற்றுநீக்கியால் சுத்தம் செய்ய வேண்டும்.
முகத்திற்கும், முகக்கவசத்திற்கும் இடைவெளியின்றி வாய், மூக்கு, நாடி ஆகியவற்றை மூடும் வகையில் அணிய வேண்டும். அணிந்த பின், முகத்தையும், முகக்கவசத்தையும் தொடுவதைத் தவிர்க்க வேண்டும். அவ்வாறு தொட வேண்டி வந்தால் கைகளை கழுவ அல்லது கிருமி நீக்கியால் சுத்தம் செய்ய வேண்டும்.
எத்தனை தடவைகள் ஒரு முகக்கவசத்தை பயன்படுத்தலாம்?
முகக்கவசங்களை பல தடவைகள் அணியக்கூடாது. ஒரு தடவை அணிந்தால், அதன் மேற்பகுதி அசித்தமாகி விடும். தொழிற்சாலைகளின் துணி முகக்கவசங்களை ஆகக்கூடியது ஒரு நாள், அதாவது காலையிலும், மாலையிலும் முகக்கவசங்களை அணிந்த பின் ஆடை இயந்திரத்தில் 60 அல்லது 95 பாகையில் சுத்தம் செய்த பின், பயன்படுத்த வேண்டும். கூட்டாட்சியின் அறிவுறுத்தலின் படி ஒரு முகக்கவசத்தை எட்டு மணி நேரங்கள் அணியலாம்.
எங்கே துணி முகக்கவசங்களை திரும்பிப் பயன்படுத்துவதென்றால் வைக்க முடியும்?
துணி முகக்கவசங்களை கடதாசிப்பையினில் அல்லது ஒரு உறையிற்குள் வைக்க வேண்டும். முகக்கவசங்களின் உட்பக்கம், வெளிப்பக்கத்தோடு படுமாறும் வேறு பொருட்களோடு (ஆடை, கைத்தொலைபேசி) படுமாறும் வைக்கக்கூடாது.
பொதுப்போக்குவரத்தில் முகக்கவசம் அணியாவிடில் தண்டம் அறவிடப்படுமா?
இல்லை, ஆனால் முகக்கவசம் அணியாத பட்சத்தில் தொடரூந்தில் இருந்து இறக்கப்படுவதற்கு வாய்ப்பு உள்ளது.
இறங்குவதை மறுத்தால் தண்டம் அறவிடப்பட முடியும். முகக்கவசங்களை கட்டுப்படுத்துவதற்காக தொடரூந்துப்பயணிகள் சேவையில் பணியாளர்கள் இருக்க மாட்டார்கள்.
முகக்கவசங்களை பிள்ளைகளும் கட்டாயம் அணிய வேண்டுமா?
பன்னிரண்டு வயதிற்கு உட்பட்ட பிள்ளைகளும், மருத்துவ ரீதியாக அணிய முடியாதவர்களும் முகக்கவசங்களை கட்டாயம் அணியத்தேவையில்லை.
எங்கே முகக்கவசங்களை பெற்றுக்கொள்ளலாம்?
பல கடைகளில் தற்போது முகக்கவசங்கள் விற்பனையில் உள்ளன. கோப் மற்றும் மிக்றோசில் ஐம்பது முகக்கவசங்களை 34.90 பிராங்கிற்கு பெற்றுக்கொள்ளலாம்.
எப்படி முகக்கவசங்களை சரியாக குப்பையில் போடலாம்?
முகக்கவசங்களை முகத்தில் இருந்து எடுக்க முன் இரு காதுகளின் பக்கமும் கொழுவப்பட்டிருக்கும் நூலில் பிடித்து மட்டுமே எடுக்க வேண்டும்.
ஏனெனில் முன்பகுதியில் கிருமிகள் பட்டிருக்க வாய்ப்பு உள்ளது. அணியப்பட்ட முக்க்கவசங்களை மூடப்பட்டுள்ள குப்பைக்கூடைகளிற்குள் வீசுவதே சிறந்ததாகும். வீசிய பின் அணியும் முன்பு போன்று கைகளை கழுவுதல் அல்லது தொற்றுநீக்கியால் சுத்தம் செய்ய வேண்டும்.
முகக்கவசத்தோடு கொள்ளை நோயின் முன் நடந்தது போன்று நடந்து கொள்ள முடியுமா?
முகக்கவசம் அணிவதால் பாதுகாப்பை மறந்து விடக்கூடாது. கூட்டாட்சியின் அறிவுறுத்தலிற்கிணங்க தொடர்ந்தும் இடைவெளியையும், சுகாதாரத்தையும் பேணுமாறு நடந்து கொள்ள வேண்டும்.
மொழிப்பெயர்ப்பு – நிதுர்சனா ரவீந்திரன்
சுகாதாரத்தின் பாதுகாப்பிற்காக செய்யப்பட்ட அல்லது தொழிற்சாலைகளில் துணியினால் செய்யப்பட்ட முகக்கவசங்களையோ அணிய வேண்டும். கழுத்தில் அணியும் துணிகள் இதற்கானவையல்ல. மற்றும் சொந்தமாக தைக்கப்பட்ட முகக்கவசங்களையும் அணிவது பரிந்துரைக்கப்படவில்லை.