இந்தியாவின் தமிழ்நாடு என்றதுமே அனைவருக்கும் நினைவில் வருவது ஆலயங்களே அந்த வகையில் 16 வருடங்களுக்கு பிறகு மகா கும்பாபிஷேகம் காணும் தமிழ் கடவுளின் பழனி ஆலய நிகழ்வு இன்று.
சிவாலயம் முருகனின் ஆறுபடைகளில் ஒன்றாகவும் 3 ஆம் படை வீடாக பக்க்தர்களால் சிறப்பிக்கப்படுகின்றது.
சிவாலயத்தில் இன்று காலை 4.30 மணிக்கு மஹாகும்பாபிஷேக நிகழ்வு ஆரம்பமானது. கடந்த வருட 25.12.2022 முகூர்த்த பந்தகால் நடப்பட்டது. 18.01.2023 பூர்வாங்க பூஜைகள் தொடங்கியது இன்றைய நிகழ்வில் ஆரம்பமாக 8 ஆம் கால வேள்வியுடன் தொடங்கி திருக்குர் நன்னீர் நீராட்டுப் பெருவிழா ,மான்கள் இசை, முதல் நிலை வழிபாடு , ஐங்கரன் வழிபாடு , சந்திரன் வழிபாடு, நடைபெற்றது.
அதனைத் தொடர்ந்து பெருநிறை வேள்வி, நறும்புகை விளக்கு, படையல், திருஒளி வழிபாடு, வேதம், ஆகமம், புராணம், இதிகாசம், காவியம், கட்டியம், கந்தபுராணம், திருஒளி வழிபாடு, பன்னிரு திருமுறை விண்ணப்பம் நடைபெற்றது.
அதன் பின் காசி, ராமேஸ்வரம் உள்ளிட்ட பல்வேறு புண்ணிய நதிகளில் இருந்து கொண்டு வரப்பட்ட புனித நீர் புறப்பாடாகி ராஜகோபுரத்துக்கு கொண்டு செல்லப்பட்டது. சிவாச்சாரியார்கள், ஓதுவார்கள், பரமாச்சாரியார்கள் வேத மந்திரங்கள் முழங்க கோபுர கலசங்களுக்கு புனித நீர் ஊற்றப்பட்டது.
அப்போது கூடி இருந்த பக்தர்கள் எழுப்பிய அரோகரா கோஷம் விண்ணைப் பிளந்தது. பக்தர்கள் மீது புனித நீர் தெளிக்கப்பட்டது. அதனைத் தொடர்ந்து கோபுர கலசங்களுக்கு தீபாராதனை காட்டப்பட்டது.
பின்னர் பிரத்யேகமாக வரவழைக்கப்பட்ட ஹெலிகாப்டரில் இருந்து ராஜகோபுரம் மீதும் பக்தர்கள் மீதும் மலர்கள் தூவப்பட்டது. அதனைத் தொடர்ந்து மூலவர் சன்னதிகளுக்கு புனித நீர் கொண்டு செல்லப்பட்டு அபிஷேகம் நடைபெற்றது.