சைவத்தின் இயல்பு பற்றிக் கூறும் நூல்கள் வட மொழியிலுள்ள வேத ஆகமங்களும் , தமிழ் மொழியிலுள்ள பன்னிரு திருமுறைகளும், பதினான்கு மெய்கண்ட சாத்துங்களுக்கும் முதன்மை பெற்று விளங்குகின்றன. இவற்றோடு சைவப்புராணன்கள், இதிகாசங்கள் என இரு பகுதியான நூல்களும் உள்ளன .
சைவத்தின் முதல் நூல்கள் வேதமும் சிவ ஆகமங்களும் எனப்படும். இவை சிவபெருமானாலேயே அருளப்பட்டவையாகும். சைவம் வேதத்தைப் பொது நூலாகவும், ஆகமத்தைச் சிறப்பு நூலாகவும் கொண்டுள்ளது.
சைவ சமயத்தின் மூலம் நாம் அடையும் பொருள்
சைவத் திருமுறைகளும், மெய்கண்ட சாத்திரங்களும் சிவபெருமானது நிறை அருள் பெற்ற, அவரது தன்மை வாய்ந்த அடியாவர்களினாலே அருளப்பட்டவையாகும் . தேவார , திருவாசகங்கள் தமிழில் மொழி வேதங்கள் எனப்படும். மெய்கண்ட சாத்திரங்கள் தமிழ்மொழி ஆகமங்கள் எனவுங் கூறப்படும்.
புராணங்கள் என்று கூறும்போது பதினெண் புராணம் என்றும் கூறுவது மரபு. ஆயின் இவற்றுள் சைவத்திற்கு உரியவை பத்துப் புராணங்களேயாம் .ஸ்கந்தத்தில் உள்ளேயுள்ள சூத சங்கிதை சைவர்களுக்கு மிகவுஞ் சிறப்பான பகுதியாகும்.
சைவ இதிகாசங்களாக கொள்வானா சிவா மகா புராணம்,சிவரகசியம் (. சமயம் என்று கூறும்போது இராமாயணம், மகாபாரதம் ஆகியவற்றை இதிகாச நூல்களாக ஏற்றுக் கொள்ளலாம் . ஆயின் சைவம் என்று குறித்துப் பேசும்போது சைவ இதிகாசங்களாக இவற்றை ஒப்புக்கொள்ள முடியாது )
சைவத்தின் தொன்மையை அறிய விரும்புவோர் “இந்தியா”,”இந்து மதம் ” என்ற பெயர்கள் வருவதற்கு முற்பட்ட காலத்திற்குச் செல்ல வேண்டும்.