June 8, 2023 7:02 am

சைவத்தின் மூலம் நாம் அடையும் பொருள்

Facebook
Twitter
WhatsApp
Telegram
Email
பொருள்

சைவ சமயத்தின் மூலம் நாம் அடையும் பொருள் யாது என்பதை முதலில் தெளிந்து கொள்வது நன்று. சைவ சமய சாதனங்களால் மூலம் சைவசமயிகள் அடைய விரும்பும் பொருள் சிவன் அல்லது பேரின்ப நிலை என்பதாம்.  உலக பொருள்களுக்கும் நிலைகளுக்கும் மேலாக (அதீதமாக) நிற்கும் அல்லது விளங்கும் பொருளே சிவன்.

சிவன் ஆதியும் அந்தமும் இல்லாதவர் . பிறப்பு , இறப்பு இல்லாதவர். உருவம், அருவம், அருவுருவம் ஆகிய திருமேனிகளில் நின்று ஆன்மாக்களுக்கு அருள் செய்பவர்.இயற்கையாகவே முற்றறிவு உடையவர் . இயல்பாகவே பாசங்களில் இருந்தும் நீக்கியவர். விருப்பு வெறுப்பு இல்லாதவர். எமது மனத்திற்கு எட்டாதவர் . அவர் செய்யுந் திருவருட் செயல்களினால் மாத்திரம் அறியத் தக்கவர். பார்க்கும் இடமெல்லாம் நீக்கமற நிறைந்த்திருப்பவர். இவ் விதமான பெருமானது திருவருள் பெற்று அவரது திருவடிகளை சேர்த்தாலே சைவத்தின் முடிப்பான் கொள்கை.

அவரது திருவடி சேர்ந்தவர்களுக்குத் திரும்பப் பிறப்பு இறப்பு இல்லை. அந்த நிலைதான் முத்திநிலை எனப்படும். அதுதான் கால தேசவர்த்தமானங்களுக்கு அப்பாட்பட்ட பேரின்பநிலை எனச் சைவ நூல்கள் கூறுகின்றன. இந்த நிலைக்கு கொண்டு செல்வதற்குச் சாதனமாக அமைந்து நாலு படிகள் சைவத்தில் உலா அவை சரியை, கிரியை, யோகம், ஜனம் என்பனவாகும்.

சைவசமய ஒழுக்கங்களாகிய திருநீறு,உருத்திராக்கம் அணித்தல் சிவதீட்சை பேரால்; திருக்கோயில் வழிபாடு, பூசை முதலியன செய்தல்,தோத்திர சாத்திர புராண நூல்களை ஓதுதல் , ஓதுவித்தல், கேட்டல் போன்ற நற்காரியங்கள் யாவும் ஆன்மாக்களை மேல்  நிலைக்கு                     உயர்த்திக் செல்லுஞ்  சாதனங்களாய் அமைந்தவையே.இவற்றின் வழியாகப் பேரின்பநிலை பெற்றவர்களே எமது  அறுபத்து மூன்று நாயன்மார்களும்,அவர்கள் வரிசையில் குறிப்பிடப்படாத மாணிக்கவாசக சுவாமிகளும், மற்றும் பல அருளாளர்களுமாவர். இவர்கள் வாழ்க்கை நெறிமுறைகளை நன்றாக அறிதல், சைவ நூல்கள் எல்லாவற்றையும் கற்றுத்  தெளிந்ததற்குச் சமமாகும்.

Facebook
Twitter
WhatsApp
Telegram
Email

ஆசிரியர்