எல்லாமே இறைவன் படைப்பு என்பதால்இறைவனின் குறிப்பிட்ட சில படைப்புகளை அலட்சியப்படுத்தி விட்டோ, வெறுத்து விட்டோ இறைவனை யாரும் அடைய முடியாது .
எல்லா உயிரையும் தன்னுயிராக எண்ணுவதே உண்மையான ஆன்மிகம்
அன்பு என்னும் கைப்பிடியில் இறைவன் என்ற மலையும் அகப்படும் என்கிறார். குடிசையே ஆனாலும் அன்பிருக்குமானால் இறைவன் என்றஅரசன் விரும்பி நுழைவான் என்கிறார்.
கடவுள் அனைத்து உயிர்களுக்கும் பொதுவானவர். அவரை சாதி, சமயம், மதம்
என்ற குறுகிய வட்டங்களுக்குள் அடைத்து விட முயற்சி அறியாமையே ஒழிய ஆன்மிகம் அல்ல.
எல்லாப் பிரிவினைகளையும் வள்ளலார் ஆன்மிகமல்ல அறிவுமல்ல என்று
மறுத்தார். பிரிவினைகள் அழிக்குமே அல்லாமல் நன்மை எதையும் விளைவிக்காது என்று அவர் கருதினார்.