விபீஷணன் பிறப்பு மற்றும் வளரும் சூழலிலும் தீயவர்களுடனான சகவாசத்திலும் தர்மாத்மாவாக வாழ்வது தான் மிக சிரமமான காரியம் அதை மெய்பித்தவர் .
இவர் தந்தை பிரம்மாவின் பேரனான விஸ்ரவரசு, தாய் அசுர வேந்தன் சுமாலியின் மகள் கைகேசிக்கும் பிறந்தவர்.
இவரது சகோதரர்கள் குபேரன்,ராவணன், கும்பகர்ணன் மற்றும் சகோதரியான சூர்ப்பனகை.தன் சகோதரர்கள் கடுந்தவம் செய்தும் அவர்களுக்கு கிட்டாத அமரவாழ்வை பிரம்மனிடம் இருந்து பெற்றார்.
சிறந்த விஷ்ணு பக்தரான இவர்,தன் சகோதரன் (சீதையை சிறை வைத்ததை) செய்த தவறுகளை பலமுறை சுட்டிகாட்டியும் அதை ஏற்க மறுத்த ராவணன் விபீஷணனை நாட்டைவிட்டு வெளியேற உத்தரவிட்டார்.
அவரும் ராமனிடம் அடைக்கலம் புகுந்து இராவணனின் மறைவுக்கு பின் இலங்கையின் அரசனானார்.இவரது மகள் திரிசடை அசோக வனத்தில் சீதைக்கு பலமுறை ஆறுதல் கூறி தேற்றியவள்.
பல்வேறு காரணங்களால் அநீதியின் பக்கம் நிற்பதை காட்டிலும் அனைத்தையும் தள்ளி தர்மத்தின் பக்கம் நிற்பதே புகழ் தரும் என்பதை விபீஷணன் வாழ்க்கையின் மூலம் அறியலாம்.