செய்திகள்

புகைப்படத் தொகுப்பு

Home செய்திகள் பாரிஸ் ஒலிம்பிக்கில் இஸ்ரேலுக்கு தடையில்லை: – சர்வதேச ஒலிம்பிக்குழு

பாரிஸ் ஒலிம்பிக்கில் இஸ்ரேலுக்கு தடையில்லை: – சர்வதேச ஒலிம்பிக்குழு

1 minutes read

காஸா யுத்தம் காரணமாக, பாரிஸ் ஒலிம்பிக் போட்டிகளில் இஸ்ரேலுக்கு தடை விதிக்கும் திட்டம் எதுவுமில்லை என சர்வதேச ஒலிம்பிக்குழு  தெரிவித்துள்ளது.

உக்ரேன் யுத்தத்தின் அடிப்படையில் ரஷ்யா மற்றும் பெலாரஸ் நாடுகளின் போட்டியாளர்கள் அவ்விரு நாடுகளின் சார்பாக போட்டிகளில் பங்குபற்றுவதற்கு ஐ.சி.சி. தடைவிதித்துள்ளது. அவர்கள் நடுநிலை போட்டியாளர்களாகவே பங்குபற்ற அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

காஸா யுத்தம் காரணமாக, இஸ்ரேலுக்கும் ஒலிம்பிக்கில் தடை விதிக்குமாறு பலஸ்தீன செயற்பாட்டாளர்கள் மற்றும் பிரான்ஸின் இடதுசாரி எம்.பிகள் சிலரும் ஐ.ஓ.சி.யை வலியுறுத்தியுள்ளனர்.

இந்நிலையில், கடந்தவாரம்  பாரிஸுக்கு விஜயம் மேற்கொண்ட, பாரிஸ் 2024 ஒலிம்பிக் போட்டிகளுக்கான சர்வதேச ஒலிம்பிக் குழுவின் (ஐ.ஓ.சி.) இணைப்புக் குழுத் தலைவர் பியர் ஒலிவியே பெக்கர்ஸ் வியூஜன்ட்டிடம், காஸா யுத்தம் காரணமாக இஸ்ரேலுக்குத் தடை விதிக்கப்படுமா என நேற்றுமுன்தினம் கேட்கப்பட்டது.

அப்போது, அவர் பதிலளிக்கையில், இஸ்ரேலுக்கு தடைவிதிக்கப்படுவதற்கு சாத்தியமில்லை எனத் தெரிவித்தார்.

‘ஆரம்பத்தில் ரஷ்யாவுக்கும் பின்னர் ரஷ்ய ஒலிம்பிக் குழுவுக்கும் தடை விதிக்கப்பட்டமைக்கான காரணங்கள் தனித்துவமானைவ.  ரஷ்யாவும், ரஷ்ய ஒலிம்பிக் குழுவும் ஒலிம்பிக் சாசனத்தின் அத்தியாவசியமான பகுதிகளை பலவீனப்படுத்தின.

பலஸ்தீன ஒலிம்பிக் குழு அல்லது இஸ்ரேலிய குழு விடயத்தில் இந்நிலைமை இல்லை, அவை அமைதியாக ஒருங்கிருக்கின்றன’ என அவர் கூறினார்.

2022 ஆம் ஆண்டு பெய்ஜிங் குளிர்கால ஒலிம்பிக் போட்டிகள் முடைந்து 4 நாட்களின் பின், அதாவது 2022 குளிர்கால பராலிம்பிக் ஆரம்பமாகுவதற்கு 9 நாட்களுக்கு முன் உக்ரேன் மீது ரஷ்யா படையெடுத்தது. இதனால் ஒலிம்பிக் கால போர் நிறுத்தத்தை ரஷ்யா மீறிவிட்டதாக ஐ.ஓ.சி தலைவர் தோமஸ் பாக் கூறியிருந்தார்.

ரஷ்யாவினால் கைப்பற்றப்பட்ட உக்ரேனிய பிராந்தியங்களைச் சேர்ந்த பிராந்திய விளையாட்டு அமைப்புகளையும் தனது அங்கத்தவர்களாக ரஷ்ய ஒலிம்பிக்குழு உள்ளடக்கியதையடுத்து, ரஷ்ய ஒலிம்பிக் குழுவுக்கும் ஐ.ஓ.சி. கடந்த ஒக்டோபர் மாதம்  தடை விதித்தது.

சினிமா

விமர்சனம்

கட்டுரை

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More