செய்திகள்

புகைப்படத் தொகுப்பு

Home கட்டுரைஆய்வுக் கட்டுரை 5,000 ஆண்டுகள் பழமையான பீரை கண்டுபிடித்த விஞ்ஞானி!

5,000 ஆண்டுகள் பழமையான பீரை கண்டுபிடித்த விஞ்ஞானி!

1 minutes read

சுமார் 5,000 ஆண்டுகளுக்கு மேலாக மன்னில புதைந்திருந்த பழமையான பீரை இஸ்ரேல் தொல்லியல் வல்லுனர்கள் கண்டுபிடித்துள்ளனர்!!

பண்டைய கால மண்பாண்டத்தில் கிடைத்த 5000 ஆண்டுகள் பழமை வாய்ந்த ஈஸ்டுகளால் அருந்தத் தகுந்த பீர் மற்றும் மேட் பானங்களை இஸ்ரேல் விஞ்ஞானிகள் தயாரித்து அசத்தியுள்ளனர்.

இஸ்ரேல் எல்லைக்குள் அமைந்துள்ள பண்டைய எகிப்து, பாலஸ்தீன் மற்றும் ஜீடானை சேர்ந்த கிபி 3000 இருந்து கிபி 4 ஆம் நூற்றாண்டிற்கு உட்பட்ட மண் பாண்டங்களில் உள்ள நுண் துளைகளில் இருந்த ஈஸ்ட்டுகளை விஞ்ஞானிகள் கண்டெடுத்துள்ளனர்.

இந்த ஈஸ்ட்டுகளைக் கொண்டு பண்டைய கால சுவையை அறிந்துகொள்ளும் நோக்கில் நவீன செய்முறைப்படி பீர் மற்றும் மேட் பானங்களை இஸ்ரேல் விஞ்ஞானிகள் தயாரித்துள்ளனர்.

ஹெப்ரூ பல்கலைகழக நுண்ணுயிரியலாளர் மைக்கெல் க்லுஸ்டைன் கூறுகையில்,

“இதன் மூலம் நாங்கள் கண்டுபிடித்தது என்னவென்றால் ஈஸ்ட்டால் மிக நீண்ட காலத்திற்கு உணவில்லாமல் வாழ முடியும் என்பதைத்தான்” என்றார்.

மேலும், பாலஸ்தீனப் பகுதியில் இருந்து பண்டையகால பத்திரிக்கையாளர்களுக்கு வழங்குவதற்கான பீரை தயாரிக்க பயன்படுத்தப்பட்ட மண்பாண்டத்தைக் கண்டெடுத்த தொல்லியலாலர் அர்ன் மேய்ர் கூறுகையில், “ஜுராஸிக் பார்க் திரைப்படத்தில் டைனோசரஸ் விஞ்ஞானிகளை விழுங்கும் இங்கு விஞ்ஞானிகள் டைனோசரஸை குடிக்கிறார்கள்” என்றார்.

பீரானது எகிப்து மற்றும் மெசபடோமிய மக்களின் தினசரி பிரதான உணவாக இருந்திருக்கிறது. இரும்பு பீர், நண்பனின் பீர், பாதுகாவலனின் பீர் என ஆரம்பகால எகிப்திய நூல்களில் பலவகையான பீர் வகைகள் பற்றிய குறிப்புகளை கணமுடிகிறது.

பீர் தயாரிப்பதில் விஞ்ஞானிகளுக்கு உதவிய உள்ளூர் பீர் தயாரிப்பாளரான சாமுவேல் நிக்கி, தயாரிக்கப்பட்ட பீர் காரமானதாகவும் அதே சமயத்தில் பழச்சுவையுடையதாகவும் புரிந்து கொள்வதற்கு கடினமான சுவையுடன் இருந்ததாகவும் சிலர் கூறுகின்றனர்.

நன்றி – zeetamil

சினிமா

விமர்சனம்

கட்டுரை

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More