செய்திகள்

புகைப்படத் தொகுப்பு

Home கட்டுரைஆய்வுக் கட்டுரை அனர்த்த ரூபவ் பேரனர்த்த நீக்கத்திற்கான வாழ்தலைப் பேசும் சுசிமன் நிர்மலவாசனது ஓவிய இயக்கம்

அனர்த்த ரூபவ் பேரனர்த்த நீக்கத்திற்கான வாழ்தலைப் பேசும் சுசிமன் நிர்மலவாசனது ஓவிய இயக்கம்

6 minutes read

கலாநிதி சி.ஜெயசங்கர்

எந்த வகையிலான ஊடகங்களிலும் ரூபவ் எந்தவிதமான இடங்களிலும் ஓவியப் படைப்புக்களை காண்பியக்கலை ஆக்கங்களை உருவாக்கவும் ரூபவ் காட்சிப்படுத்தவுமான இயல்பு சுசிமன் நிர்மாலவாசனுக்குரியது. அவரது படைப்பாக்கத்திற்கான கருவூலங்களான மக்களதும் சூழலினதும் இணைவைப் பேணுவதிலும் கவனம் கொண்டிருப்பதை அவருடைய ஓவியக்
காட்சிப்படுத்தல்கள் புலப்படுத்தி நிற்கின்றன.

அதேவேளை காலனியம் அறிமுகப்படுத்திய நவீன அறிவியலின் அம்சமான நவீன ஓவியம் வரிக்கின்ற ‘தராதரங்களிலும்’ தடம் பதித்தவராக ஆனால் அதனால் தீர்மானிக்கப்படாதவராக இயங்குவதையும் காணமுடிகின்றது.

நவீன ஓவிய உலகின் அதிகார அல்லது அங்கீகார பீடமாகக் கொள்ளப்படுகின்ற கலைக்கூடங்களில் காட்சிப்படுத்தலுக்கான அவாவற்ற இளம் ஆளுமையாக சுசிமன் நிர்மலவாசன் இயங்குவது மிகுந்த கவனத்திற்கும் ரூபவ் கற்றலுக்கும் உரியது.

மேலும் ஓவியப் படைப்பாக்கம் என்பது சிறப்புத் தேர்ச்சி பெற்ற வல்லுனர்களது விடயம் மட்டுமல்ல ரூபவ் எல்லா மனிதருள்ளும் படைப்பாக்கத் திறன் உள்ளுறைந்து காணப்படுகின்றது என்ற நம்பிக்கை கொண்டவராகவும் நிர்மலவாசன் விளங்குகின்றார்.

சிறுவர்கள் ரூபவ் இளையவர்கள் ரூபவ் மூத்தோர்களுடன் இணைந்து ஓவிய ரூபவ் காண்பியக்கலை உருவாக்கங்களை முன்னெடுப்பது ரூபவ் காட்சிப்படுத்துவது என்பதும் நிர்மலவாசனது கலையாகவும் இருக்கின்றது.

காட்சிப்படுத்தல்களின் போது மீளுருவாக்கம் பெறும் ரூபவ் விரிவாக்கம் பெறும் ரூபவ் முழுமை பெறும் ஓவிய ஆக்கங்களது உரித்தாளராகவும் நிர்மலவாசன் விளங்குகின்றார்.

இந்தவகையில் படைப்பாக்க ஆதிக்க நீக்கம் பற்றிய சிந்தனைக்கான அறிவியல் வளமாக வாசனின் ஓவிய ஆக்க முன்னெடுப்புக்கள் காணப்படுகின்றன.

இத்தகைய வித்தியாசமானதும் சிறப்புத்தன்மை வாய்ந்ததுமான இயக்கத்தின் மூலம் பற்றிச் சிந்திக்கும் பொழுது ஓவியர் அ.மாற்கு முன்வந்து நிற்கின்றார். முற்றுகைக் காலங்களிலும்ரூபவ் பொருளாதாரத்தடைக் காலங்களிலும் பாடசாலைப் பிள்ளைகள் பயன்படுத்தும் ஓவியம் வரைதலுக்கான குறைந்த பட்ச ஊடகங்களோ வளங்களோ கிடைக்காத சூழலிலும் பால்மாப் பொருட்கள் ரூபவ் பிஸ்கட்டுக்கள் பொதி செய்யப்பட்டு வரும் காட்போட் மட்டைகளில் கரித்துண்டுகளால் ஓவியங்கள் வரைந்து சுவர்களிலோரூபவ் வேலிகளிலோ தொங்க விட்டு உரையாடல்களை உருவாக்கியவர் ஓவியர் அ.மாற்கு

ஓவியர் அ.மாற்குவின் மாணவர்களும் இந்த வகையினரே ஓவியர் கமலா வாசுகியினது ஒவிய முன்னெடுப்புக்கள் இதன் தொடர்ச்சியும் விரிவாக்கமும் கொண்டவை. பெண்களுடன் இணைந்து கூட்டுக்கலை ஆக்கங்களை நிகழ்த்துவது காட்சிப்படுத்துவது உரையாடல்களை முன்னெடுப்பது என்பதாக இச்செயற்பாடுகள் காணப்படும். கைவிடப்பட்ட ரூபவ் சூழலுக்கு நட்பான பொருட்களைக் கையாண்டு காண்பியக்கலை ஆக்கங்களும்ரூபவ் காட்சிப்படுத்தல்களும் நிகழ்த்தப்படும். இவை பொது அல்லது வெகுசன உரையாடலுக்கானதாக வடிவமைக்கப்பட்டிருக்கும்.

வன்முறைகளுக்கு உட்படுத்தப்பட்ட பெண்களுடன் இணைந்து உள ஆற்றுப்படுத்தலாகவும் ரூபவ் உணர்வு வெளிப்பாடாகவும் ரூபவ் எதிர்ப்புக் குரலாகவும் உருவாக்கப்பட்டு காட்சிப்படுத்தலுக்குக் கொண்டுவரப்படும் ஆக்கங்கள் பொது வெளிகளிலேயே உருவாக்கப்படும் ஆக்கங்கள் என்பவை வாசனது வித்தியாசமான உருவாக்கத்திற்கும் இயக்கத்திற்குமான முன்னோட்டங்களாக இருந்திருக்கின்றன.

இத்தகைய செயற்பாடுகளின் முக்கியமான முன்னெடுப்பாளராகவும் வாசனது இயக்கம் விரிவாக்கம் பெற்றிருக்கின்றது என்பதும் குறிப்பிடத்தக்கது.

கடலும் ரூபவ் வயல் வெளியும் ரூபவ் வாவியும் ரூபவ் கண்ணாக்காடுகளும் சூழ்ந்த இயற்கைச் சூழலில் மனிதராலும் இயற்கையாலும் ஏற்பட்ட ஏற்பட்டுக் கொண்டிருக்கின்ற பேரனர்த்தங்களின் சிதைவுகளிடை வாழ்தலைப் பேசுவதையும் ரூபவ் அனர்த்த ரூபவ் பேரனர்த்த நீக்கத்திற்கான வாழ்தலைப் பேசுவதையும் வாசனது ஓவிய இயக்கம் நோக்கமாகக் கொண்டுள்ளது.

மூன்றாவது கண் உள்ளர் அறிவு திறன் செயற்பாடுகளுக்கான நண்பர்கள் குழாம் ரூபவ் வன்முறையற்ற வாழ்வுக்கான ஓவியர் குழாம் என்பவற்றில் ஆழ்ந்த ரூடவ்டுபாடும் இயக்கமும் வாசனது பார்வையையும் நிலைப்பாட்டையும் தீர்மானித்திருக்கின்றது என்பதை அவரது ஓவியங்கள் ரூபவ் ஓவிய ஆக்க முறைமைகள் காட்சிப்படுத்தல் மற்றும் தொடர்பாடல் முறைகளில் கண்டுகொள்ளலாம் வாசனின் தேடல் அவரது கலை வாண்மையையும் ஆளுமையையும் தீர்மானித்திருக்கின்றது. கலை நிறுவனமொன்றிற் கூடாக எத்தகைய ஆளுமைகள் அல்லது பட்டதாரிகள் உருவாக்கப்படுகிறார்கள்? வாசனைப் போன்ற ஆளுமைகளைக் கலை நிறுவனங்களுக்கூடாக உருவாக்க முடியுமா? முடியுமாயின் அதன் முறைமை எத்தகையதாக இருக்க வேண்டும் ரூபவ் என்பவை முக்கியமான உரையாடலுக்குரியவை.

வாசனது ஓவியங்களில் மீன்களும் ரூபவ் கருவாடும் ரூபவ் கண்ணாக்காடும் முக்கிய இடம் பிடித்திருப்பவை. மனிதர்களின் அனுபவங்களைக் ரூபவ் கதைகளை அவர்கள் வாழும் இயற்கைச் சூழலின் உருவங்கள்ரூபவ் படிமங்கள் மூலம் முழுமை பெறச்செய்து படைப்பாக்கியுள்ளார்.

காட்சிப்படுத்தும் வெளியையும் ஒவிய ஆக்கங்களையும் இணைத்து நினைவு கூருதலூடாக ஓவியங்களாகக் கதைகளை எழுதுபவர் ஓவியர் சுசிமன் நிர்மலவாசன். பன்குடாவெளி கண்ணாடிப் போடியாரின் பாழடைந்த வீட்டில் காட்சிப்படுத்தப்பட்ட ஓவியங்கள் இதற்கு மிகச் சிறந்த உதாரணமாகும் ரூபவ் நவீன ஓவியத்தின் அதிகார அல்லது அங்கீகார பீடமான ஓவிய கூடங்களுக்குச் சவாலானதும் படிப்பினையுமான ஓவியக் காட்சிப்படுத்தலாக வாசனது ‘பன்குடாவெளி 90’ கண்ணாடிப்போடியாரின் பாழடைந்த வீட்டு ஓவியக் காட்சிப்படுத்தல் அமைகின்றது.

வன்முறையற்ற வாழ்வுக்கான ஓவியக் குழாத்தின் காட்சிப்படுத்தல்களின் நீட்சியாக இது அமைகின்றது.  கலை ஆக்கங்களின் வலிமை கலைக் காட்சிப்படுத்தல்களின் வலிமை அதிகாரமிக்க இடங்களில் அவை வைக்கப்படுவதில் அல்ல ரூபவ் அப்படைப்புகள் கிளர்த்தும் ரூபவ் தொடர்புபடுத்தும்ரூபவ் இணைக்கும் பல அனுபவங்களைக் கொண்டுவரும் சூழலையும் சூழ்நிலையையும் உருவாக்குவதில் தங்கியிருக்கிறது என்பதை மேற்படி காட்சிப்டுத்தல்கள் உணர்த்தி இருக்கின்றன.

இந்தவகையில் சுசிமன் நிர்மலவாசனின் நினைவு கோருதல் என்ற தலைப்பிலான 21 ஓவியங்களை உள்ளடக்கிய ஓவியக் காட்சிப்படுத்தல் அவரது இன்னொரு பரிமாணமாகக் காணப்படுகின்றது.

சிறுவயதில் அவரறிந்த கதைகள் ரூபவ் அவர் விளையாடிய விளையாட்டுகள் அவர் வாழ்ந்த சுற்றம் சூழல்  என்பவற்றிற்கு பின்னாளில் என்ன நடந்து விட்டிருக்கிறது என்பதை அவரது சிறுபராயத்து நினைவுகள் ரூபவ் சிறுபராயத்து வெளிப்பாட்டு முறைமைகள் ரூபவ் சுற்றுச் சூழலும் சுற்றமும் என்பதாக ஓவியங்கள் சமகாலத்துக் கதைகளை வண்ணங்களின் வழி பேசுகின்றன.

இந்த ஓவியக்காட்சி 2021 ஏப்ரல் 29 முதல் தினமும் காலை 10.00 மணி தொடக்கம் நள்ளிரவு வரை கொழும்பில் பரடைஸ் ரோட் கலரியில் இடம்பெற இருக்கின்றது.

இலங்கையின் சமகால ஓவியப்பின்புலத்தில் மிகவும் வித்தியாசமான ஓவியங்களின் காட்சியாக இது அமைகிறது என்பது குறிப்பிடத்தக்கது.

சினிமா

விமர்சனம்

கட்டுரை

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More