பயங்கர தீ விபத்து பாகிஸ்தான் தலைநகர் இஸ்லாமாபாத்தில் உள்ள செண்டோரஸ் மாலில் ஏற்பட்டுள்ளது.
மாலின் மூன்றாவது தளத்தில் உள்ள ஒரு உணவகத்தில் ஏற்பட்ட தீ விபத்து வேகமாகப் பரவி முழு ”புட் கோர்டை”யும் கபளீகரம் செய்தது. இதையடுத்து, மாலில் உள்ள நகரும் படிக்கட்டுகள் வழியாக மக்கள் அலறியடித்தபடி வெளியே ஓடி வந்தனர்.
தீயணைபுத்துறையினர் வர தாமதாம் ஏற்பட்டதால் கீழ் தளங்களுக்கும், மேல் தளத்தில் உள்ள குடியிருப்புகளுக்கும் தீ வேகமாகப் பரவத்தொடங்கியது.
இதனால் பல அடி உயரத்திற்கு வானம் புகை மண்டலமாக காட்சியளித்தது.