துருக்கியில் இடம்பெற்ற குண்டுவெடிப்பு சம்பவத்தின் சூத்திரதாரி சிரியாவை சேர்ந்த AhlamBashir எனப்படும் பெண் YPG/PKK தீவிரவாத இயக்கத்தை சேர்ந்தவர் என துருக்கியின் பாதுகாப்பு தரப்பு தகவல் வெளியிட்டுள்ளது.
அதிபர்தைய்யிப் எர்டோகன் தலைமையில் பொருளாதார ரீதியாக உலகில் முன்னேறி வரும் துருக்கியை நெருக்கடியில் தள்ளும் சூழ்ச்சியாகவே இந்த குண்டு வெடிப்பு நிகழ்த்தப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
பொதுமக்கள் மற்றும் சுற்றுலா பயணிகள் மிக அதிகமாக நடமாடும் துருக்கியின் பிரபலமான சதுக்கத்தில் இந்த வெடிகுண்டு பொதியை வைத்து விட்டு தப்பிச்சென்றவர் இவர்தான் CCTV மற்றும் விசாரணைகள் மூலம் அடையாளம் காணப்பட்டுள்ளது.
மேற்படி குண்டுவெடிப்பு காரணமாக இதுவரை 6 பேர் உயிரிழந்தனர், மேலும் 81க்கும் மேற்பட்டோர் காயமடைந்தனர்.
பொதுவிடத்தில் குண்டு பொதியை வைத்துவிட்டு தப்பிச்சென்று உடனடியாக தனது ஆடைகளையும் மாற்றி விட்டு வீட்டில் ஒழிந்திருந்த வேளை துருக்கியின் புலனாய்வு பொலிசாரால் மிக கச்சிதமாக கைது செய்யப்பட்டார்.
குறித்த பெண் கைது செய்யப்படும் காட்சியை துருக்கி பாதுகாப்பு தரப்பு வெளியிட்டுள்ளது