இந்தியர்களே இங்கிலாந்துக்குள் அதிகளவில் சட்டவிரோதமாக நுழைகின்றனர் என இங்கிலாந்து உள்துறை அலுவலகம் தெரிவித்துள்ளது.
கடந்த ஆண்டு (2022) டிசெம்பர் வரையிலான புள்ளிவிவரங்களின் அடிப்படையில் இந்தத் தகவலை இங்கிலாந்து உள்துறை அலுவலகம் வெளியிட்டுள்ளது.
இதன்படி, ஆங்கிலக் கால்வாய் வழியாக சட்டவிரோதமாக இங்கிலாந்து நாட்டுக்குள் நுழைந்த இந்தியாவைச் சேர்ந்தவர்களின் எண்ணிக்கை கடந்த ஆண்டு மிகப் பெரிய அளவில் அதிகரித்துள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.
அதாவது, மொத்தம் 683 இந்திய ஆண்கள் சிறிய படகுகள் வழியாக இங்கிலாந்து கரையில் தரையிறங்கியதாகக் கூறப்படுகிறது.
மேலும், 2021 இல் சிறிய படகுகள் வழியாக இந்தியாவைச் சேர்ந்த 67 பேர் இங்கிலாந்து சென்றதாகவும், 2020 இல் 64 பேர் சென்றதாகவும், எனினும், 2019 மற்றும் 2018 இல் யாரும் செல்லவில்லை என்றும் தெரிவிக்கப்படுகிறது.
தொடர்புடைய செய்தி – பாரிஸுக்கு விரைந்த ரிஷி சுனக்