இவ்வாண்டு மோசமான செயல்திறன் கொண்ட பொருளாதாரத்தை இங்கிலாந்து எதிர்நோக்கும் என சர்வதேச நாணய நிதியம் (IMF) எச்சரித்துள்ளது.
சர்வதேச நாணய நிதியத்தின் கூற்றுப்படி, இவ்வாண்டு உலகின் மிக மோசமாக செயல்படும் முக்கிய பொருளாதாரங்களில் ஒன்றாக இங்கிலாந்து இருக்கும் என எதிர்வுகூரப்பட்டுள்ளது.
இங்கிலாந்தின் பொருளாதாரம் இவ்வாண்டு சுருங்கும் என்று IMF கணித்துள்ளது. அதாவது 2023இல் இங்கிலாந்து பொருளாதாரம் 0.3% சுருங்கும் என்றும், அடுத்த ஆண்டு 1% வளர்ச்சியடையும் என்றும் எதிர்பார்க்கிறது.
2023ஆம் ஆண்டில் இங்கிலாந்து பொருளாதாரத்தின் செயல்திறன் G20 என அழைக்கப்படும், 20 பெரிய பொருளாதாரங்களில் மிக மோசமானதாக இருக்கும். இதில் பொருளாதாரத் தடைகளால் பாதிக்கப்பட்டுள்ள ரஷ்யாவும் அடங்கும்.
இதையும் படியுங்க : இங்கிலாந்தில் வட்டி விகிதங்கள் 4.25% ஆக உயர்வு