பல்வேறு ஆயுத படைகளில் ஆட்களை சேர்ப்பதற்காக சி.ஏ .பி.எப்(CAPF)தேர்வு இந்தியா முழுவதும் வருடம் தோறும் நடப்பது வழக்கம். அத்தகைய தேர்வில் பங்கு பெறுபவர் இந்தி, ஆங்கில மொழிகளில் மாத்திரமீ தேர்வு எழுதலாம் என்ற நிலை இருந்தது.
இதையடுத்து,நாடு முழுவதும் 2024.01.01 நடைபெறவுள்ள சி.ஏ .பி.எப் தேர்வு இந்தி,ஆங்கிலம் மட்டுமின்றி தமிழ் உள்பட 15 மொழிகளில் நடத்தப்படும் என மத்திய உள்துறை மந்திரி அம்தஷா அறிவிப்பு விடுத்துள்ளார்.
இந்நிலையில் முதல்வர் மு.க.ஸ்டாலின் வெளியிட்டுள்ள டுவிட்டர் செய்தியில் மத்திய அரசின் அனைத்து தேர்வுகளையும் தமிழ் மற்றும் பிற மொழிகளில் நடத்த வேண்டும் என்ற தனது கோரிக்கையாலே இந்த முடிவு கிடைத்துள்ளதாக பதிவிட்டுள்ளார்.