இந்தியா செலுத்தியுள்ள சந்திரயான் 3 லேண்டர் நாளை மறுதினம் நிலவில் இறங்க இருக்கிறது.
நிலவின் தென்பகுதியை ஆய்வு செய்வதை நோக்காக கொண்டு தரையிறக்கப்பட்ட சந்திரியான் 2 தோல்வியை அடுத்து தரையிறக்கப்பட்டுள்ள ஒன்றாகும்.
இதற்கிடையே சந்திரயான்-2 ஆர்பிட்டர் நிலவை சுற்றிக் கொண்டிருக்கிறது. இந்த ஆர்பிட்டர் சந்திரயான் 3 லேண்டருடன் தொடர்பை ஏற்படுத்திக் கொண்டுள்ளது.
இரண்டும் தங்களுக்கிடையே தகவல்களை பரிமாறிக் கொண்டுள்ளது என இஸ்ரோ தெரிவித்துள்ளது. இதனால் லேண்டர் நிலவின் மேற்பகுதியை அடைய, இஸ்ரோவுக்கு கூடுதலா ஒரு வழி கிடைத்துள்ளது.