மறைந்த ராணி எலிசபெத்தை மேலும் பல வழிகளில் கௌரவிக்க இங்கிலாந்து அரசாங்கம் திட்டமிட்டுள்ளது.
அதன்படி, ராணிக்கு நிரந்தர நினைவகத்தை அமைப்பதோடு, தேசியளவில் அவரைப் பெருமையோடு நினைவுகூரும் திட்டத்தையும் அறிமுகப்படுத்தவிருப்பதாகவும், 2026ஆம் ஆண்டில் அவற்றை அறிமுகம் செய்யவிருப்பதாகவும் இங்கிலாந்து அரசாங்கம், இன்று (03) தெரிவித்துள்ளது.
ராணி எலிசபெத் உயிரோடு இருந்திருந்தால், தமது 100ஆவது பிறந்தநாளை 2026இல் கொண்டாடியிருப்பார். அவர் கடந்த 2022ஆம் ஆண்டு செப்டெம்பர் மாதம், 96 வயதில் மரணித்தார்.
“ராணி எலிசபெத், தேசத்துக்கு ஆற்றிய பெரும் பங்களிப்பை எதிர்கால தலைமுறையினருக்கு எடுத்துக்காட்டுவது சவால்மிக்க ஒன்றாக அமையும்,” என்று அவரது முன்னாள் அந்தரங்கச் செயலாளர் கூறியிருந்தார்.
ராணி எலிசபெத் 70 ஆண்டுகாலம் ராணியாகப் பதவி வகித்தார் என்பது குறிப்பிடத்தக்கது.