December 7, 2023 3:27 am

தோல்வியை தாங்க முடியாமல் கண்ணீர்விட்ட இந்திய அணி வீரர்கள்!

Facebook
Twitter
WhatsApp
Telegram
Email
இந்திய அணி வீரர்கள்

ஆஸ்திரேலியா அணிக்கு எதிரான உலகக்கோப்பை இறுதிப்போட்டியில் முதல் பேட்டிங் ஆடிய இந்திய அணி 240 ரன்கள் சேர்த்து ஆல் அவுட்டாகியது.

எனினும், 43 ஓவர்களில் இலக்கை எட்டி 6 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வென்ற ஆஸ்திரேலியா அணி, 6வது முறையாக உலகக்கோப்பையை வென்று சாதனை படைத்துள்ளது.

வெற்றிக்கு பின் ஆஸ்திரேலியா அணி வீரர்கள் உற்சாகமாக கொண்டாடிய நிலையில், இந்திய அணி வீரர்கள் மைதானத்திலேயே கலங்கிப் போயினர்.

ஒரு பக்கம் சிராஜ் கண்ணீர் விட்டு அழுத நிலையில், அவருக்கு பும்ரா மற்றும் கேஎல் ராகுல் இருவரும் ஆறுதல் கூறி ஓய்வறைக்கு அழைத்து சென்றனர்.

அதன்பின் ரோகித் சர்மா சோகத்துடன் வெற்றிபெற்ற அணிக்கு வாழ்த்து கூறிவிட்டு, கண்ணீருடன் ஓய்வறை நோக்கி ஓடினார்.

அதேபோல் இந்திய அணியின் விராட் கோலியும் மைதானத்தில் கண் கலங்கினார்.

2019ஆம் ஆண்டு உலகக்கோப்பையை தலைவனாக பறிகொடுத்த விராட் கோலி இம்முறை தளபதியாக பறி கொடுத்துள்ளார்.

மைதானத்திலேயே விராட் கோலி கண்ணீர்விட்ட நிலையில், யாருக்கும் தெரிய கூடாது என்பதற்காக தொப்பியை வைத்து முகத்தை மறைத்து கொண்டு ஓய்வறை திரும்பினார்.

இது இந்திய கிரிக்கெட் ரசிகர்களுக்கு சோகத்தை ஏற்படுத்தியது.

Facebook
Twitter
WhatsApp
Telegram
Email

ஆசிரியர்