செய்திகள்

புகைப்படத் தொகுப்பு

Home சினிமா வீராயி மக்கள் | திரைவிமர்சனம்

வீராயி மக்கள் | திரைவிமர்சனம்

1 minutes read

தயாரிப்பு : வைட் ஸ்கிரீன் பிலிம்ஸ்

நடிகர்கள் : வேல. ராமமூர்த்தி மறைந்த நடிகர் மாரிமுத்து, தீபா சங்கர், சுரேஷ் நந்தா, நந்தனா, ரமா மற்றும் பலர்.

இயக்கம் : நாகராஜ் கருப்பையா

மதிப்பீடு : 2 / 5

இந்திய சமூகம் மற்றும் தமிழ் சமூகத்தின் கட்டமைப்புகளில் வேரூன்றியது குடும்பம் என்ற அமைப்பு. இந்த அமைப்பின் முக்கியத்துவத்தை வலியுறுத்தி வெளியாகி இருக்கும் ‘வீராயி மக்கள்’ படம் ரசிகர்களை கவர்ந்ததா? இல்லையா? என்பதை தொடர்ந்து காண்போம்.

தமிழகத்தின் உள்ளடங்கிய கிராமத்தில் வீராயி எனும் கணவனை இழந்த பெண்மணி ஒருத்தி தன் பிள்ளைகளான வேலராமமூர்த்தி- மறைந்த நடிகர் மாரிமுத்து – ஜெரால்ட் மில்டன்- ஆகிய மூன்று மகன்களையும், தீபா சங்கர் என்ற மகளையும் ஒற்றை ஆளாக வளர்த்தெடுக்கிறார்.

இவர்கள் ஒற்றுமையாகவும், ஒருவரை ஒருவர் விட்டுக் கொடுக்காமலும் வாழ வேண்டும் என விரும்புகிறார். ஆனால் இளைய மகன் காதலித்து திருமணம் செய்து கொண்டதால் குடும்பத்திற்குள் முதல் பிரிவு உண்டாகிறது.

அவர்கள் வாழும் பகுதியில் ஏற்பட்ட கடும் வறட்சி காரணமாக மூத்த பிள்ளை குடும்ப பாரத்தை சுமப்பதற்காக அங்கிருந்து திருப்பூர் எனும் தொழில் நகரத்திற்கு இடம்பெயர்கிறார்.

இந்நிலையில் மாமியாருக்கும் இரண்டாவது மருமகளுக்கும் வழக்கமான ஈகோ யுத்தம் ஏற்படுகிறது. இதனால் பிரச்சனை உண்டாகி சொத்து பிரிப்பு பிரச்சனையாக மாறுகிறது. இந்த பிரச்சனையில் தன்னுடைய பிள்ளைகளின் விட்டுக் கொடுக்காத தன்மையின் காரணமாக மனம் விரக்தி அடைந்து இவர்களை வளர்த்தெடுத்த தாய் வீராயி மரணம் அடைகிறார்.

அதன் பிறகு அண்ணன் – தம்பி – தங்கை இடையே பெரிய பிரிவு ஏற்பட்டு, ஒவ்வொருவரும் தனித்தனியாக இருக்கிறார்கள். யாரும் யாரோடும் பேசுவதில்லை. இந்நிலையில் இவர்களின் வாரிசுகள் மீண்டும் ஒன்றிணைய முயற்சிக்கிறார்கள். அவர்களின் முயற்சி வெற்றி பெற்றதா? இல்லையா? என்பது தான் இப்படத்தின் கதை.

இன்றைய சூழலில் குடும்பங்களின்  மதிப்பீடு குறைக்கப்பட்டதையும் மறக்கடிக்கப்பட்டதையும்  மறைக்கப்பட்டதையும்  இந்த படைப்பு நினைவுறுத்துகிறது. அந்த வகையில் தனி குடித்தனங்களால் சூழப்பட்டிருக்கும் இந்த தமிழ் சமூகத்திற்கு இந்த படைப்பு காலத்தின் கட்டாயமான அவசியமாகும். இதனை காட்சிப்படுத்துவதில் தற்போதைய இளைய தலைமுறையினரின் ரசனைக்கேற்ப இல்லாததால் ஒரு பிரிவு ரசிகர்களுக்கு காட்சி வழி திரைமொழி, சோர்வை தருகிறது.

மூத்த பிள்ளையான வேலராமமூர்த்தி -இரண்டாவது பிள்ளையான மறைந்த நடிகர் மாரிமுத்து – மூன்றாவது பிள்ளையான ஜெரால்ட் மில்டன்- தங்கையான தீபா சங்கர் – இவர்களின் நடிப்பில் இயக்குநர் எதிர்பார்த்ததை விட கூடுதலாக உணர்வுபூர்வமாக நடித்து ரசிகர்களை கண்கலங்க வைக்கிறார் தீபா சங்கர்.

இவரது மகளாக நடித்திருக்கும் நடிகை நந்தனா அசலான கிராமத்து முகம். இளமையும், குறும்பும் இருப்பதால் ரசிக்கலாம். வேல ராமமூர்த்தியின் மகனாக நடித்திருக்கும் தயாரிப்பாளரும், நடிகருமான சுரேஷ் நந்தா இயக்குநர் சொன்னதை செய்திருக்கிறார்.பாடல்களில் மண் மணம் கமழ்ந்தாலும் பழைய பாடல் போல் தோன்றுவதால் ஒரு பிரிவினருக்கே பாடல்கள் பிடித்திருக்கிறது.

சினிமா

விமர்சனம்

கட்டுரை

வணக்கம் இலண்டன்

Vanakkam London – Sri Lanka, London and world Latest Breaking News and Headlines

@2013 – 2024 | Vanakkam London | All Rights Reserved.

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More