0
பாகிஸ்தான் கராச்சியில் உள்ள ரஷித் மின்ஹஸ் சாலையில் பல அடுக்குமாடிகளை கொண்ட வணிக வளாகத்தில் இன்று பயங்கர தீ விபத்து ஏற்பட்டது.
இந்த தீ விபத்தில் சிக்கி 11 பேர் உயிரிழந்துள்ளதுடன், மேலும் பலர் காயம் அடைந்துள்ளனர்.
சம்பவ இடத்துக்கு தீயணைப்புப் படை வீரர்கள் விரைந்து சென்று மீட்புப் பணிகளில் ஈடுபட்டனர்.
தீ விபத்துக்கான காரணம் குறித்து அந்நாட்டு பொலிஸார் விசாரணை நடத்தி வருகின்றனர்.