1981ஆம் ஆண்டு திருமண நிச்சயத்திற்கு எடுக்கப்பட்ட படத்தில் இளவரசி டயானா அணிந்திருந்த ஆடை ஏலத்தில் விற்கப்படவுள்ளது.
அந்த இளஞ்சிவப்புச் சட்டையை Julien’s Auctions நிறுவனம் ஏலத்தில் விடுகிறது.
அது அதிகபட்சம் 100,000 டொலருக்கு விற்கப்படலாம் என்று எதிர்பார்க்கப்படுவதாக The Guardian செய்தி வெளிட்டுள்ளது.
குறித்த சட்டையை உருவாக்கிய வடிவமைப்பாளர்கள்தான் டயானா, மன்னர் சார்ல்ஸுடன் திருமணத்தின்போது அணிந்திருந்த உடையையும் உருவாக்கினர்.
சட்டை இதற்கு முன்னர் கென்சிங்டன் அரண்மனையில் காட்சிக்கு வைக்கப்பட்டிருந்தது.
தொடர்புடைய செய்தி – ஏலத்தில் விடப்படும் இளவரசி டயானாவின் ஆடைகள்!
ஏலத்தில் டயானா அணிந்திருந்த மற்றுமொரு ஆடையும் விற்கப்படவுள்ளது.
அந்த ஆடையை, டயானா 1985ஆம் ஆண்டு இத்தாலியில் அணிந்திருந்தார்.
அதன் மதிப்பு 100,000 டொலருக்கும் 200,000 டொலருக்கும் இடைப்பட்டிருக்கும் என்று மதிப்பிடப்பட்டுள்ளது.
ஏலம் அடுத்த மாதம் நடைபெறவுள்ளது.