கொழும்பு நகரின் பல பகுதிகளில் அமைந்துள்ள 700 மரங்கள், தேசிய தாவரவியல் பூங்கா திணைக்களத்தின் நிபுணர்கள் குழுவால், அண்மையில் பரிசோதிக்கப்பட்டன.
இதனையடுத்து, கொழும்பு – பொரளை பகுதியில் காணப்படும் அதிகளவான மரங்கள் முறிந்து விழும் அபாயத்தில் உள்ளதாக கொழும்பு மாநகர சபை எச்சரித்துள்ளது.
அங்கு ஆபத்தில் உள்ள 97 மரங்கள் இனங்காணப்பட்டுள்ளதுடன், கொழும்பு மாநகர சபையின் வரம்புக்குள் 329 ஆபத்தான நிலையில் உள்ள மரங்கள் இனங்காணப்பட்டுள்ளன.
தொடர்புடைய செய்தி : கொழும்பில் பஸ் மீது மரம் முறிந்து விழுந்து ஐவர் பலி!
மழையுடனான காலநிலை காரணமாக மரங்கள் முறிந்து விழும் அபாயம் அதிகரித்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
இதேவேளை, கொழும்பு நகரில் காணப்பட்ட ஆபத்தான 214 மரங்கள் இதுவரை அகற்றப்பட்டுள்ளதாகவும் கொழும்பு மாநகர சபை தெரிவித்துள்ளது.