வேகமாய்ப் பரவி வரும் JN.1 எனும் புதிய கொவிட் துணைக்கிருமி தொடர்பில் உலக சுகாதார ஸ்தாபனம் எச்சரித்துள்ளது.
அந்தக் கருமி இங்கிலாந்து, இந்தியா, சீனா மற்றும் அமெரிக்கா உள்ளிட்ட நாடுகளில் காணப்படுவதாக தெரிவித்த உலகச் சுகாதார ஸ்தாபனம், JN.1 துணைக்கிருமி தொடர்பில் மிகவும் கவனத்துடன் செயற்பட வேண்டும் எனவும் தெரிவித்ததுஃ
தற்போதைக்கு பொதுமக்களுக்குப் பாதிப்பு குறைவு. எனினும், இதற்கு தடுப்பூசியே போதும் என்றும் குளிர்காலத்தில் கொரோனா மற்றம் ஏனைய கிருமிப் பரவலும் அதிகரிக்கலாம் என்றும் உலக சுகாதார ஸ்தாபனம் எச்சரித்தது.
கொரோனாவை ஏற்படுத்தும் கிருமி தொடர்ந்து மாறிக்கொண்டே இருக்கிறது. அதனாலேயே புதிய துணைக்கிருமிகள் பிறக்கின்றன.