ஐரோப்பிய ஒன்றியத்தில் விற்பனை செய்யப்படும் அனைத்து கைத்தொலைபேசிகள், டெப்லெட்டுகள் மற்றும் கமராக்களில் டிசம்பர் 28, 2024 முதல் நிலையான USB Type-C சார்ஜிங் போர்ட் (USB Type-C charging port) பொருத்தப்படும் என ஐரோப்பிய நாடாளுமன்றம் அறிவித்துள்ளது.
ஐரோப்பிய நாடாளுமன்றம், பொதுமக்களின் வசதிக்காகவும், சுற்றுச்சூழலை மேம்படுத்துவதற்காகவும் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாகக் கூறியுள்ளது.
ஒக்டோபர் 2022 இல் ஒரு அறிக்கையில், ஐரோப்பிய நாடாளுமன்றம் முதன்முதலில் 2024ஆம் ஆண்டின் இறுதிக்குள், ஐரோப்பயிய ஒன்றியத்தில் விற்பனை செய்யப்படும் அனைத்து கைத்தொலைபேசிகள், டெப்லெட்டுகள் மற்றும் கமராக்களிலும் USB Type-C ரக சார்ஜிங் வசதி ஏற்படுத்தப்பட வேண்டும் எனக் குறிப்பிடப்பட்டது.
இதுத் தொடர்பில் 2022ஆம் ஆண்டில், ஐரோப்பிய நாடாளுமன்றத்தில் இடம்பெற்ற வாக்கெடுப்பில் ஆதரவாக 602 வாக்குகள், எதிராக 13 வாக்குகள் கிடைத்ததோடு, 8 பேர் வாக்களிக்காத நிலையில் சட்டம் நிறைவேற்றப்பட்டது.
புதிய சட்டம், மின்னணு கழிவுகளைக் குறைப்பதற்கும், மேலும் நிலையான தெரிவுகளைச் செய்வதற்கு நுகர்வோருக்கு அதிகாரம் அளிப்பதற்குமான ஒரு பரந்த ஐரோப்பிய ஒன்றிய முயற்சியின் ஒரு பகுதியாக கருதப்படுகிறது.
புதிய விதிகளுக்கு அமைய, நுகர்வோர் ஒவ்வொரு முறையும் புதிய சாதனத்தை வாங்கும்போது வேறு சார்ஜர் தேவைப்படாது, ஏனெனில் அவர்கள் சிறிய மற்றும் நடுத்தர அளவிலான சிறிய மின்னணு சாதனங்களின் முழு அளவிலான ஒரே சார்ஜரைப் பயன்படுத்த முடியும்.
உற்பத்தியாளரைப் பொருட்படுத்தாமல், mobile phones, tablets, digital cameras, headphones மற்றும் headsets, handheld videogame consoles மற்றும் portable speakers, e-readers, keyboards, mice, portable navigation systems, earbuds மற்றும் laptops ஆகியன கேபிள் மூலம் ரீசார்ஜ் செய்யக்கூடிய வகையில், 100 வொட்ஸ் வரை மின்சார விநியோகத்துடன், USB Type-C போர்ட் பொருத்தப்பட்டிருக்க வேண்டும் எனக் குறிப்பிடப்பட்டுள்ளது.