புரோஸ்டேட் சுரப்பி வீக்க நோயினால் பாதிக்கப்பட்டு, மத்திய லண்டன் வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வந்த இங்கிலாந்து மன்னர் மூன்றாம் சார்லஸ் சிகிச்சை நிறைவுபெற்று வைத்தியசாலையை விட்டு வெளியேறியுள்ளார்.
இந்த சிகிச்சைக்காக மூன்று நாட்கள் இவர் வைத்தியசாலையில் தங்கியிருந்தார்.
மன்னர் சார்லஸ், நேற்று (29) பிற்பகல் தனது மனைவி ராணி கமிலாவுடன் வைத்தியசாலையை விட்டு வெளியேறினார். அப்போது அவரது காரில் ஏறுவதற்கு முன்பு கேமராக்களுக்கு கை அசைத்தார்.
https://x.com/RoyalFamily/status/1751992588918215152?s=20
முன்னதாக, வேல்ஸ் இளவரசி கேத்தரின், வயிற்று அறுவை சிகிச்சைக்காக கிட்டத்தட்ட இரண்டு வாரங்களுக்குப் பிறகு, அதே மத்திய லண்டன் வைத்தியசாலையை விட்டு வெளியேறினார்.
தொடர்புடைய செய்தி : புரோஸ்டேட் சுரப்பி வீக்க நோயினால் பாதிக்கப்பட்டுள்ள மன்னர்!
இதேவேளை, வைத்தியசாலையில் சிகிச்சை வழங்கிய மற்றும் தன்னை பார்வையிட வந்த அனைவருக்கும் மன்னர் நன்றி தெரிவித்துள்ளார் என அரண்மனை தகவல் தெரிவித்துள்ளது.