காஸாவில் தற்காலிகச் சண்டை நிறுத்தத்துக்கான புதிய பரிந்துரையை ஆராய்வதாக ஹமாஸ் கிளர்ச்சிப் படை தெரிவித்துள்ளது.
பிணையாளிகளை விடுவிப்பதும் குறித்த பரிந்துரையில் அடங்கும்.
எனினும், இஸ்ரேலிய பிரதமர் பெஞ்சமின் நெட்டன்யாஹூ (Benjamin Netanyahu) ஆயிரக்கணக்கான பாலஸ்தீனக் கைதிகளை விடுதலை செய்யவோ, காஸாவில் இருந்து இஸ்ரேலியத் துருப்பினரை வெளியேற்றவோ கேட்டுக்கொள்ளப்படும் எவ்விதத் திட்டத்தையும் ஏற்கப் போவதில்லை என்று கூறியிருக்கிறார்.
அந்தப் பரிந்துரையை எகிப்து, கட்டார், அமெரிக்கா மற்றும் இஸ்ரேல் ஆகியவை இணைந்து வரைந்தன.
அந்தப் பரிந்துரை ஏற்றுக்கொள்ளப்பட்டால் தற்காலிகச் சண்டை நிறுத்தம் 3 கட்டங்களாக இடம்பெறும்.
முதலில் ஹமாஸ் அதன் வசம் இருக்கும் பொதுமக்களை விடுவிக்கும். பின்னர் இராணுவத் துருப்பினரை விடுதலை செய்யும்.
இறுதியாக, கொல்லப்பட்ட பிணையாளிகளின் சடலங்களை ஹமாஸ் விடுவிக்கும் என்று பரிந்துரைக்கப்படுவதாகக் கூறப்படுகிறது.