தெற்கு லண்டன், Clapham பகுதியில் வைத்து முன்னெடுக்கப்பட்ட அமில வீச்சுத் தாக்குதலில் (corrosive substance) தாய் மற்றும் இரு பிள்ளைகள் உட்பட 9 பேர் எரி காயங்களுடன் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
ஒரு குடும்பத்தை இலக்கு வைத்து இந்த தாக்குதல் நடந்துள்ளதாகவும் அவர்களுக்கு உதவச் சென்ற பொதுக்கள் மூவரும் பொலிஸார் மூவரும் இதில் பாதிக்கப்பட்டுள்ளதாக முதற்கட்ட தகவல் வெளியாகியுள்ளது.
தான் உதவி செய்ய முயன்றபோது, “என்னால் பார்க்க முடியவில்லை, என்னால் பார்க்க முடியவில்லை” என்று அம்மா அழுததாகவும் “இது மிகவும் பயங்கரமானது” என்றும், இந்தச் சம்பவத்தை நேரில் பார்த்த நபர், பிபிசியிடம் தெரிவித்துள்ளார்.
நேற்றிரவு (31) 7.25 மணிக்கு இடம்பெற்றுள்ள இந்த அமில வீச்சு சம்பவத்தை அடுத்து, அப்பகுதியில் பெருமளவு தீயணைப்பு வீரர்கள் மற்றும் பொலிஸார் குவிக்கப்பட்டனர்.
இதனால் Clapham பகுதியில் பெரும் பரபரப்பு நிலவியது.
அமில வீச்சுத் தாக்குதவை நடத்தி விட்டு, அப்பகுதியில் இருந்து தப்பியோடிய அடையாளம் தெரியாத நபரைத் தேடும் பணி துரிதப்படுத்தப்பட்டுள்ளதாக Clapham பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
மூலம்: பிபிசி