பனிப்பாறைகளாலும், எரிமலைகளாலும் சூழப்பட்டுள்ளதால், நெருப்பு மற்றும் பனியால் ஆன நாடு எனவும் ஐஸ்லாந்தை அழைக்கின்றனர்.
எரிமலைகளிலிருந்து “லாவா” (lava) எனப்படும் எரிமலை குழம்புகள் வெளிக்கிளம்புவதும், அவற்றின் சீற்றம் குறைந்த பிறகு ஊரை சுத்தப்படுத்தி மீண்டும் குடியேறுவதும் அங்கு வழக்கமான ஒன்று.
சில தினங்களுக்கு முன், இந்நாட்டின் க்ரிண்டாவிக் பகுதியில் எரிமலைக்குழம்பு பெருக்கெடுத்து ஓடத் தொடங்கியது. இதையடுத்து, அப்பகுதியில் வாழ்ந்த சுமார் 3800 பேர், தங்கள் வீடுகளை விட்டு வெளியேறி விட்டனர்.
எனினும், க்ரிண்டாவிக் பகுதியில் எரிமலை குழம்பு மொத்த ஊரையும் நாசம் செய்து விட்டதால், மீண்டும் அங்கு குடியேற முடியாத நிலை ஏற்பட்டுள்ளது.