ஆங்கிலக் கால்வாயில் சிறிய படகு ஒன்று விபத்துக்குள்ளானதில் ஒருவர் உயிரிழந்துள்ளதுடன் இருவர் காணாமல் போயுள்ளதாக பிரெஞ்சு கடலோர காவல்படை உறுதிப்படுத்தியுள்ளது.
புலம்பெயர்ந்தவர்களை ஏற்றிச் சென்ற படகு ஆங்கிலக் கால்வாயில் சிக்கியதில் மற்றைய இருவரும் உயிரிழந்திருக்கலாம் என அஞ்சப்படுகிறது.
புதன்கிழமையன்று பிரான்ஸ் கடற்கரையில் சிக்கியபோது படகில் 50 குடியேற்றவாசிகள் இருந்ததாக பிரெஞ்சு கடல் அதிகாரிகள் தெரிவித்தனர்.
பிரெஞ்சு கடற்படை படகுகள் மற்றும் ஹெலிகாப்டர் மூலம் தேடுதல் நடத்தியதில் ஒருவர் மீட்கப்பட்டதுடன், இருவரை காணவில்லை என பிரான்ஸ் கடலோர காவல்படை தெரிவித்துள்ளது.
பிரெஞ்சு கடலோர காவல்படையின் அறிக்கை ஒன்றில், “பிரெஞ்சு கடற்படை புதன்கிழமை கால்வாயில் நான்கு மீட்பு நடவடிக்கைகளை மேற்கொண்டது, படகுகள் மற்றும் ஹெலிகாப்டரைப் பயன்படுத்தி சுமார் 180 பேருக்கு உதவியது” என தெரிவிக்கப்பட்டுள்ளது.