விதவைகள் மறுமணம் செய்தால் நிதியுதவி அளிக்க இந்தியாவில் ஜார்க்கண்ட் மாநிலம் முன்வந்துள்ளது.
மறுமணம் செய்துகொள்ளும் விதவைப் விதவை பெண்களுக்கு தலா 2 லட்சம் ரூபாய் வழங்க உதவித்தொகை வழங்க உள்ளதாக அம்மாநில பட்ஜெட்டில் அறிவிப்பு வெளியாகியுள்ளது.
இது தொடர்பாக பேசிய பெண்கள் மற்றும் குழந்தைகள் மற்றும் சமூக நலத்துறையின் செயலாளர் மனோஜ் குமார்,
“விதவைகள் கண்ணியத்துடன் வாழ இந்த திட்டம் உதவும் என்பதால், இதனை ஜார்க்கண்ட் அரசு அமல்படுத்தி இருக்கிறது. விதவைகள் தங்கள் திருமணப் பதிவுச் சான்றிதழுடன் விண்ணப்பிக்கலாம்.
“மறுமணமான ஒரு வருடத்தில் அவர்களது வங்கி கணக்கில் 2 லட்சம் ரூபாய் செலுத்தப்படும்” என்றார்.
ஜார்க்கண்ட் அரசு, 2024-25 நிதியாண்டில் ரூ.1.28 இலட்சம் கோடி பட்ஜெட்டை தாக்கல் செய்துள்ளது.
சம்பை சோரன் முதலமைச்சராக பொறுப்பேற்ற பின்பு தாக்கல் செய்யப்படும் முதல் பட்ஜெட் இதுவாகும். என்பது குறிப்பிடத்தக்கது.