நாடு முழுவதும் ஆயிரக்கணக்கான ஊழியர்களை பணி நீக்கம் செய்ய கனடாவின் பிரதான தொலைத்தொடர்பு சேவை நிறுவனம் முடிவெடுத்துள்ளது.
இதனையடுத்து, குறித்த பணி நீக்கம் செய்யும் நிறுவனத்தின் தீர்மானம் தொடர்பில் விளக்கமளிக்குமாறு கோரியோ, பெல் கனடா, தொலைத்தொடர்பு சேவை வழங்குனர் நிறுவனத்தின் பிரதம நிறைவேற்று அதிகாரி மிர்கோ பிபிக்கினை நாடாளுமன்றத்திற்கு அழைத்துள்ளனர்.
பெப்ரவரி 29ஆம் திகதியும், மார்ச் 19ஆம் திகதியும் இவர்களுக்கு அழைப்பு விடுக்கப்பட்ட போதிலும் தவிர்க்க முடியாதக காரணங்களினால் அவர்களால் சமுகமளிக்க முடியவில்லை என நாடாளுமன்ற உறுப்பினர்கள் தெரிவிக்கின்றனர்.
எவ்வாறாயினும், கடந்த வாரம் இடம்பெற்ற முக்கிய கூட்டமொன்றின் போது பெல் கனடா பிரதிநிதிகளை மீண்டும் ஏப்ரல் மாதம் 11ஆம் திகதி அழைப்பதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது.